ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பை துவங்கியவர் சையத் அலி ஷா கிலானி 92. சமீபத்தில் இவர் காலமானார்.
அவரது இறுதி ஊர்வலத்தின்போது பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்பதால், போலீசார் உத்தரவுப்படி கிலானியின் உடல் உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கிலானியின் உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
போலீசார் கூறியதாவது: கிலானியின் உடலை உடனடியாக நல்லடக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் கூறியதற்கு, அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். கிலானி உடலில் போர்த்தப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை நாங்கள் தான் அகற்றினோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE