200 கிலோ கெட்டுப்போன மீன்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

200 கிலோ கெட்டுப்போன மீன்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பறிமுதல்

Added : செப் 05, 2021
Share
சிந்தாதிரிப்பேட்டை--சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், 200 கிலோ கெட்டுப் போன மீன்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னையின் பிரதான மீன் மார்க்கெட்டுகளில், 'பார்மலின்' ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இந்த ரசாயனம் கலந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் தாக்கும் அபாயம்

சிந்தாதிரிப்பேட்டை--சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், 200 கிலோ கெட்டுப் போன மீன்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னையின் பிரதான மீன் மார்க்கெட்டுகளில், 'பார்மலின்' ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இந்த ரசாயனம் கலந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது.இதையடுத்து, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் நொச்சிக்குப்பத்தில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.இதில், அதிகபட்சமாக சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இருந்து, 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.காசிமேடில், 75 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.மூன்று மார்க்கெட்டிலிருந்தும், 10க்கும் மேற்பட்ட மீன் மாதிரிகளை, பரிசோதனைக்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால், மீன் மார்க்கெட்டுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X