பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
தாய், மகள் தற்கொலைஜெ.ஜெ.நகர்: பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, 43; ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ராஜலட்சுமி, 38. மகள் சிவதர்ஷினி, 14. கணவர் வேறொரு பெண்ணுடன் பேசி வருவதை, ராஜலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.வழக்கம்போல், ராஜபாண்டி நேற்று ஓட்டலுக்கு சென்றார். பின் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தபோது, மனைவி மற்றும் மகள்

தாய், மகள் தற்கொலைஜெ.ஜெ.நகர்: பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, 43; ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ராஜலட்சுமி, 38. மகள் சிவதர்ஷினி, 14. கணவர் வேறொரு பெண்ணுடன் பேசி வருவதை, ராஜலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.வழக்கம்போல், ராஜபாண்டி நேற்று ஓட்டலுக்கு சென்றார். பின் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தபோது, மனைவி மற்றும் மகள் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.இவர்களது உடல்கள், அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் மருத்துவமனை தகவலின் அடிப்படையில், ஜெ.ஜெ.நகர் போலீசார் ராஜபாண்டியிடம் விசாரித்து வருகின்றனர். பெண் சடலம் மீட்புபூந்தமல்லி: காட்டுப்பாக்கம், பெரியப்பட்டு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. இவரது மனைவி அமீனா, 28. ஆந்திராவில் பணி புரியும் கார்த்திக், 10 நாட்களுக்கு ஒருமுறை வருவது வழக்கம்.இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து, நேற்று காலை துர்நாற்றம் வீசியது. போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, கட்டிலில் அமீனா உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கொலை குற்றவாளி கைதுகாசிமேடு: அரியலுாரைச் சேர்ந்தவர் கமலகண்ணன், 42. இவர், கடந்த, 29ம் தேதி இரவு, காசிமேடு அருகே படுகாயத்துடன் கிடந்தார்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமலக்கண்ணன், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாரின் விசாரணையில், அரியலுாரைச் சேர்ந்த இளையராஜா, 29, என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்தது தெரியவந்தது. இளையராஜாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.ரூ.2.80 லட்சம் மாயம்அண்ணாசதுக்கம்: திருவல்லிக்கேணி, கற்பக கன்னி அம்மன் கோவில், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணி, 48; வீட்டு வேலை செய்பவர். இவர், நேற்று முன்தினம் இரவு பீரோ வாங்குவதற்காக, அரிசி மூட்டையில் வைத்திருந்த பணத்தை எடுக்க முற்பட்டார். அப்போது அதிலிருந்த, 2.80 லட்சம் ரூபாய் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.காமுகனுக்கு '10 ஆண்டு'சென்னை: கொடுங்கையூர், கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன், 32. கடந்த, 2015ல், அதே பகுதியில் உள்ள, 16 வயது சிறுமியின் வீட்டில் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, சிறுமியை திருமணம் செய்தவர், பின் வீட்டை விட்டு வெளியேற்றினார். விசாரித்த கொடுங்கையூர் போலீசார், கோகுலகண்ணனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். வழக்கு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோகுலகண்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X