சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியரிடம் அத்துமீறியோர் சிக்கினர்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சென்னை-சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இருவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை, ஆக., 28ம் தேதி இரவு முதல் காணவில்லை என, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.விசாரணையில், விஜய் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று,

சென்னை-சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இருவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை, ஆக., 28ம் தேதி இரவு முதல் காணவில்லை என, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.விசாரணையில், விஜய் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விட்டது தெரியவந்தது.அங்கிருந்து, சிறுமி ஆட்டோவில், ராயபுரம், மாடிப்பூங்காவிற்கு வந்துள்ளார். அங்கு சிறுமிக்கு அறிமுகமான இளையராஜா, 19, என்பவர், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தன் நண்பரான கணேசன், 20, என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்று, இருவரும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை மீட்டு, இளையராஜா, கணேசன் ஆகியோரை போக்சோவில் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயை தேடி வருகின்றனர்.டெய்லருக்கு 'போக்சோ' மாதவரம்: மாத்துாரைச் சேர்ந்தவர் சுகுமார், 56; தையல்காரர். இவர் ஆக., 30ம் தேதி, நான்கு வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாதவரம் அனைத்து மகளிர் போலீசார், சுகுமாரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.அக்கா கணவர் கைது திருவள்ளூரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 33; ஐ.சி.எப்., தொழிற்சாலை ஒப்பந்த பணியாளர். இவரது மனைவியின், 15 வயது தங்கை ஓராண்டுக்கு முன் கர்ப்பமானார். இது குறித்து சிறுமி, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 2020 மார்ச், 20ல் புகார் அளித்தார். சிறுமிக்கு கடந்த பிப்., 19ல் ஆண் குழந்தை பிறந்தது. விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், கோவில்பதாகையில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, வழக்கு, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆக., 31ம் தேதி மாற்றப்பட்டது.ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக்கை தேடி அலைந்தனர். இந்நிலையில், ஆய்வாளர் லதா காப்பகத்தில் இருந்த சிறுமியிடம் விசாரித்தார். இதில், சிறுமியை பலாத்காரம் செய்தது, அவரது அக்காள் கணவர் சீனிவாசன் என்பது தெரிய வந்தது. சீனிவாசனின் மிரட்டலுக்கு பயந்து, சிறுமி கற்பனையாக கார்த்திக் என்பவரின் பெயரைக் கூறியதும், அதை முறையாக விசாரிக்காமல், திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் ஆவடிக்கு மாற்றியதும் தெரியவந்து உள்ளது.தொடர்ந்து ஆவடி மகளிர் போலீசார், சீனிவாசனை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X