சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுங்க அதிகாரிக்கு கத்திக்குத்து

Added : செப் 05, 2021
Share
Advertisement
கோயம்பேடு-சுங்கத்துறை பெண் துணை கமிஷனரை கத்தியால் குத்திய அவரது கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோயம்பேடில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வ முத்துக்குமரன், 36; மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி சர்மிளா, 32.இவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில், சுங்கத்துறை துணை கமிஷனராக பணிபுரிகிறார். மதுரையில் நடைபெறும் தன் உறவினர் வீட்டு திருமண

கோயம்பேடு-சுங்கத்துறை பெண் துணை கமிஷனரை கத்தியால் குத்திய அவரது கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோயம்பேடில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வ முத்துக்குமரன், 36; மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி சர்மிளா, 32.இவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில், சுங்கத்துறை துணை கமிஷனராக பணிபுரிகிறார். மதுரையில் நடைபெறும் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என, சர்மிளா கூறியுள்ளார்.இதனால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த செல்வ முத்துக்குமரன், கத்தியால், சர்மிளாவின் மார்பு மற்றும் வலது கையில் குத்தியுள்ளார்.இதில், காயமடைந்த சர்மிளா, வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த கோயம்பேடு போலீசார், செல்வ முத்துக்குமரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.சம்பவத்தின் போது, செல்வ முத்துக்குமரன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சர்மிளா, ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X