சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜம்மு - காஷ்மீர் வியாபாரிகளிடம் மோசடி செய்தவர் கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
கோயம்பேடு-ஜம்மு - காஷ்மீர் ஆப்பிள் வியாபாரிகளிடம், 1.63 கோடி ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கி, மூன்று ஆண்டுகளாக பணம் தராமல் ஏமாற்றி வந்த நபரை, ஜம்மு -- காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.விருகம்பாக்கம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் தினகரன், 38. இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.2018ல், ஜம்மு -- காஷ்மீரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து, 1 கோடியே, 18

கோயம்பேடு-ஜம்மு - காஷ்மீர் ஆப்பிள் வியாபாரிகளிடம், 1.63 கோடி ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கி, மூன்று ஆண்டுகளாக பணம் தராமல் ஏமாற்றி வந்த நபரை, ஜம்மு -- காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.விருகம்பாக்கம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் தினகரன், 38. இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.2018ல், ஜம்மு -- காஷ்மீரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து, 1 கோடியே, 18 லட்சம் ரூபாய்க்கும், மற்றொரு நிறுவனத்திடமிருந்து, 45 லட்சம் ரூபாய்க்கும், தினகரன் ஆப்பிள் வாங்கி உள்ளார்.ஆனால், மூன்று ஆண்டுகளாக, அதற்கான பணத்தை அளிக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து பாதிக்கப்பட்டோர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், தினகரன் கைது செய்யப்படவில்லை.பாதிக்கப்பட்டோர் ஜம்மு -- காஷ்மீரில் உள்ள சோபியன் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.இந்நிலையில், ஜம்மு - -காஷ்மீர் நீதிமன்ற உத்தரவின்படி, சோபியன் போலீசார் நேற்று முன்தினம், விமானத்தில் சென்னை வந்தனர்.கோயம்பேடு போலீசார் உதவியுடன், விருகம்பாக்கத்தில் இருந்த தினகரனை நேற்று கைது செய்தனர்.தினகரனை ஜம்மு - -காஷ்மீருக்கு அழைத்துச் செல்ல, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆணை பெறவும், ஜம்மு - -காஷ்மீரில் வைத்து விசாரிக்கவும், ஜம்மு - -காஷ்மீர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X