பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல், ராமேஸ்வரம், மதுரைக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா!

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சட்டசபையில் நேற்று சுற்றுலா துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்த பின், அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை, இரவிலும் கண்டு மகிழும் வகையில், லேசர் தொழில் நுட்பத்தில் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்* தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள்
Helicopter Tourism, Madurai, Kodaikanal, Rameshwaram

சட்டசபையில் நேற்று சுற்றுலா துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்த பின், அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை, இரவிலும் கண்டு மகிழும் வகையில், லேசர் தொழில் நுட்பத்தில் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்

* தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

* மாநிலத்தில் உள்ள 300 சுற்றுலா தலங்களில், சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகள் ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்

* மாநிலத்தில் உள்ள அணைகட்டுகள், நீர்தேக்கங்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தலமாக மாற்றப்படும்

* சுற்றுலா தலங்களை மேம்படுப்படுத்துதல் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா கொள்கை வகுக்கப்படும்

* பல்வேறு வசதிகளுடன் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை மேம்படுத்தப்படும்

* மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்க, 1 கோடி ரூபாய் செலவில் ஹெலிபேட் அமைக்கப்படும்.


latest tamil news* முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்; தர்மபுரியில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாதலம் மேம்படுத்தப்படும்

* ஜவ்வாது மலையில், பீமா நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்துதல், ஜமுனாமரத்துார் ஏரியில் புதிய படகு குழாம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். யாத்ரிகர்கள், சுற்றுலா பயணியர் வசதிக்காக, சிறந்த சுற்றுலா தலமாக ராமேஸ்வரம் மேம்படுத்தப்படும்

* ஏலகிரி மலையில், பாராகிளைடிங், மலையேற்றம், இயற்கை வழி நடை பயணம், திறந்தவெளி முகாம்கள் போன்ற சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும்

* வெளிநாடுகளில் உள்ளது போன்று, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே, சொகுசு கப்பல் சேவை துவங்குவது குறித்து சாத்தியகூறுகள் ஆராயப்படும்

* பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்காக, பூங்கா, காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறை, உணவகம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்படும்

* முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப்பகுதிகள் மேம்படுத்தப்படும்.

* கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் மற்றும் வாலாங்குளம் ஏரியில், புதிய படகு குழாம்கள் ஏற்படுத்தப்படும்

* மெரினா, கோவளம், மாமல்லபுரம், முதலியார்குப்பம், மனோரா, அரியமான், முட்டம் ஆகிய கடற்கரைகளுக்கு, ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பால் வழங்கப்படும் நீலக்கொடி அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்

* மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து, பொழுதுபோக்கு படகு சவாரி துவங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
05-செப்-202114:29:25 IST Report Abuse
M  Ramachandran நல்ல முயற்சி. இதற்கு உரிய நிதி ஆதாரம் வேண்டும்.பக்கத்துக்கு மணிநலன்கள் எப்போதோ சுற்றுலா துறையில் முடிந்த இடங்களிலெல்லாம் சுற்றா மேம்பாட்டுகள் செய்து தமிழ்நாட்டிற்கு அருகிலேயே நம் வருமானத்தை எல்லாம் சுரண்டி கொண்டிருக்கிறார்கள் உள்ளதையே நாம் காப்பாற்றி கொள்ளமல் கோட்டை விட்டோம்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
05-செப்-202110:06:43 IST Report Abuse
SUBBU கன்னியாகுமரியில் கருணாநிதி அமைத்தது திருவள்ளுவர் சிலையா? அல்லது பரதநாட்டிய பெண்ணின் அபிநய முத்திரையா?
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
05-செப்-202109:55:16 IST Report Abuse
SKANDH கற்பனையில் பட்டதை எல்லாம் சொல்லிட்டார். பிறகு இன்னும் கொஞ்சம் விட்டதெல்லாம் வரும். இவன் கல் ஒன்றும் செய்யப்போவதில்லை. இன்னும் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லுக்குறிகள் கொண்டு வாங்கடா பார்ப்போம்.challenge
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X