பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சொன்னதை செய்வாரா முதல்வர்?

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டப் போவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.இதை மனதார பாராட்டி, வரவேற்று பேசி இருக்கிறார் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:latest tamil newsமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டப் போவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.இதை மனதார பாராட்டி, வரவேற்று பேசி இருக்கிறார் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம்.

மேலும், 'என் தந்தை, தலைவர் கருணாநிதியின் பரம பக்தர்' என்று வேறு புகழாரம் சூட்டி இருக்கிறார், இந்த மகானுபாவர்!அ.தி.மு.க.,வை தோற்றுவித்த எம்.ஜி.ஆருக்கு தீயசக்தியாக தெரிந்தவர், கருணாநிதி.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் இறுதி காலம் வரை பரம எதிரியாக கருதிய நபரும் கருணாநிதி தான்.ஜெயலலிதாவால் முதல்வர் பதவி பெற்ற பன்னீர்செல்வத்திற்கு, இன்று கருணாநிதி ஒப்பற்ற தலைவராகத் தெரிகிறார்.'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பர்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் வரிசையாக வலம் வர ஆரம்பித்து விட்டன.பன்னீர்செல்வம், வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிய அடுக்கு மாடி குடியிருப்புகள் எல்லாம் தரமற்றவை என்பது, வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன.இதில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தாமோதரன் உறுதி அளித்திருப்பது, அவருக்கு பீதியை கிளப்பி விட்டது.

அதனால் தான் தி.மு.க.,விடம் சரணாகதி அடைய தயாராகி விட்டார் போலும்!கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரம், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தலைவலியை உண்டாக்கி விட்டது.முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் தங்கமணி, 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன விஷயத்தில் வகையாக சிக்கி உள்ளார்.'பயிர் கடன் ரத்து செய்த விவகாரத்தில், 515 கோடி ருபாய் மோசடி நடந்துள்ளது' என்கிறார், அமைச்சர் பெரியசாமி.கிணறு வெட்ட பூதம் கிளம்பி வந்தது போல, அ.தி.மு.க., அமைச்சர்கள் எல்லாம் கொள்ளை அடித்த விஷயம், இப்போது அம்பலமாகி வருகிறது.


latest tamil newsஅதனால் தான் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் எல்லாம், இன்று தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு, 'ஜால்ரா' அடிக்க துவங்கி விட்டனர்.'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., அமைச்சர்களின் ஊழலை அம்பலப்படுத்தி சிறைக்கு அனுப்புவோம்' என்று அடித்து சொன்னார், ஸ்டாலின்.இந்த விஷயத்திலாவது, முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி செய்ய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-செப்-202122:24:27 IST Report Abuse
RajanRajan திருச்சியில் நூறு கோடி செலவில் 135 அடியில் பெரியார் சிலை அமைக்க விடியல் அரசு ஆணை மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் நிதி இல்லை என்று ஒப்பாரி , சிலை அமைக்க , கல்லறை அமைக்க , நினைவகம் அமைக்க நூறு நூறு கோடியாக திட்டத்திற்கு தொகை ஒதுக்கும் அவலம் மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை , காரணம் ஊடகத்தின் துணையோடு மக்களை ஏமாற்றலாம் என்று விடியல் முடிவு செய்து விட்டது
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
05-செப்-202120:48:28 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஊழலை பற்றி பேசுவதை செம காமெடி....
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
05-செப்-202120:22:53 IST Report Abuse
Dhurvesh நேற்று வரை தடையை மீறுவோம் என்று எல்லாம் குதித்த வாத்து இன்று நாங்கள் எங்கள் வீடுகளில் ஒரு லட்சம் பேர் வீட்டுவாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம் என்று பவ்யமா தெரிவித்து விட்டார் , நேற்று COMMISSIONER ஒரு போடு உள்ளே தூக்கி வைத்துவிடுவோம் என்றார் ips க்கு தெரியாதா என்ன PENDAMIC காலத்தில் உள்ளே போனால் எப்போ வருவோம் என்று தெரியாது பாவம் ABOUT TURN அடிச்சிவிட்டார் ,
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
06-செப்-202105:56:01 IST Report Abuse
NicoleThomsonஇது என்ன மிசா காலமா இல்லை கிஷோர் கே சாமி போன்றோரை தூக்கி உள்ளே வைக்க ஈஸியா இருந்தது , இவரை வைக்க கஷ்டமா? அது சரி நாம தான் கைது நாடகத்தின் பொது முதலில் சத்தமே இல்லை ஆனால் பின்னால் ஐயோ கைது பண்றங்க என்று டப்பிங் வாய்ஸ் வைத்த கார்பொரேட் சர்க்காரியா குடும்பம் ஆச்சே விக்கு வைப்பது மாத்திரம் தான் உங்களுக்கு தெரியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X