பயங்கரவாத அமைப்பினர் சரண்; அசாமில் அமைதி ஒப்பந்தம்| Dinamalar

பயங்கரவாத அமைப்பினர் சரண்; அசாமில் அமைதி ஒப்பந்தம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (2) | |
புதுடில்லி : அசாமின் கர்பி ஆங்லாங் பிராந்தியத்தைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாத அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்துள்ளதை அடுத்து, அவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம் செய்துள்ளன.அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது இங்குள்ள கர்பி ஆங்லாங் பகுதிக்கு தன்னாட்சி கேட்டு சில அமைப்புகள் போராடி வந்தன. இந்நிலையில்

புதுடில்லி : அசாமின் கர்பி ஆங்லாங் பிராந்தியத்தைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாத அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்துள்ளதை அடுத்து, அவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம் செய்துள்ளன.



latest tamil news



அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது இங்குள்ள கர்பி ஆங்லாங் பகுதிக்கு தன்னாட்சி கேட்டு சில அமைப்புகள் போராடி வந்தன. இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் சேர்வதாக ஐந்து அமைப்புகள் கூறியுள்ளன.

இதையடுத்து இந்த அமைப்புகளுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம் செய்துஉள்ளன. இந்த அமைப்புகளைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து நேற்று சரணடைந்தனர்.


latest tamil news



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தது முதல், வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் ஏற்கனவே பல பயங்கரவாத அமைப்புகள் போராட்டத்தை கைவிட்டு அமைதி ஒப்பந்தம் செய்துள்ளன.

அந்த வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கர்பி ஆங்லாங் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக, 1,000 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கால நிர்ணயம் செய்து இந்தப் பணிகள் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X