நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை மீறி 'பேனர்'

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (2)
Share
திருவள்ளூர்-நீதிமன்ற உத்தரவை மீறி, திருவள்ளூர் நகர சாலைகளிலும் 'பேனர்' வைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், சாலைகளில் பேனர் வைக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை பின்பற்ற வேண்டும் என, கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளூர் நகரில், பிரதான சாலைகளில், கட்டுமான
 நீதிமன்ற உத்தரவை மீறி 'பேனர்'

திருவள்ளூர்-நீதிமன்ற உத்தரவை மீறி, திருவள்ளூர் நகர சாலைகளிலும் 'பேனர்' வைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், சாலைகளில் பேனர் வைக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதை பின்பற்ற வேண்டும் என, கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளூர் நகரில், பிரதான சாலைகளில், கட்டுமான நிறுவனங்கள், ஜவுளி, பர்னிச்சர் கடைகள் மற்றும் அரசியல் கட்சியினர் பேனர் வைத்துள்ளனர். இவற்றை போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.திருவள்ளூர் ஜே.என்.சாலையில் இருந்து, அய்யனார் அவென்யூ செல்லும் வழியில், நகர சாலையிலும் பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி அலுவலர்களின் கவனக்குறைவால், ராஜாஜிபுரம், இந்திரா காந்தி சாலை பகுதிகளிலும், அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டு உள்ளதாக, சமூக ஆர்வ லர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலைகளில் மட்டும் சோதனை செய்யாமல், பொதுமக்கள் குடியிருக்கும் நகர சாலைகளிலும் கண்காணித்து, அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மூவர் மீது வழக்கு

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில், அனுமதியின்றி பேனர் வைத்திருந்த, புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த குணசேகர், ஜான், வேங்கை ஆகிய மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X