பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்..

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஊட்டச்சத்து விழிப்புணர்வு கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. விழாவில், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன், பி.டி.ஓ., வாசுதேவன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி ஆகியோர் பங்கேற்றனர்.அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஊட்டச்சத்து உணவு வகை கண்காட்சி நடைபெற்றது. அதை

ஊட்டச்சத்து விழிப்புணர்வு கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. விழாவில், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன், பி.டி.ஓ., வாசுதேவன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி ஆகியோர் பங்கேற்றனர்.

அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஊட்டச்சத்து உணவு வகை கண்காட்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து, கோட்டக்கரை, சாமிரெட்டிகண்டிகை ஆகிய பகுதியில் பேரணியாக சென்று, ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

l காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் செப்., மாதம், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் தொடக்க நிகழ்ச்சியாக, நேற்று காலை ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் துவக்கி வைத்தார். அங்கன்வாடி பணியாளர்கள் பலர் பங்கேற்று, தேரடி வீதி வரை ஊர்வலம் சென்றனர். ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

2,391 பேருக்கு தடுப்பூசிஉத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதார நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ஒன்றியத்தில் உள்ள மானாம்பதி, சாலவாக்கம், படூர், உத்திரமேரூர் நகர்ப்புறம் உள்ளிட்ட ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், பேரூராட்சி மற்றும் கிராமவாசிகள் என நேற்று ஒரே நாளில், 2,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என, உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தெரிவித்தார்.

l திருத்தணி: திருத்தணி நகராட்சி, செங்குந்தர் நகர் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதார துறையின் சார்பில், கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது.

முகாமை நகராட்சி ஆணையர் ப்ரீத்தி, துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர், கொரோனா தடுப்பூசி போட்டனர். நேற்று மட்டும், 105 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.

வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், வண்டலுார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாவில், 35 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த 32 குறுவட்ட ஆய்வாளர்களையும், மாவட்ட நிர்வாக நலனுக்காக, பணியிட மாற்றம் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சங்க நிர்வாகிகள் தேர்வுகாஞ்சிபுரம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சுப்பணி அலுவலர்கள் சங்கம் சார்பில், பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவராக இருந்த சங்கர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலராக கோபி, பொருளாளராக கார்த்திக் உட்பட பல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு ஆடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X