சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியிடம் சிறுவன் பலாத்காரம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்-திருப்போரூர் அருகே, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.திருப்போரூர் அருகாமை பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி; அரசுப் பள்ளி நான்காம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை, இயற்கை உபாதை கழிக்க, வீட்டின் அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்றார்.அதே பகுதி, 16 வயது இளைஞன், சிறுமியை பாழடைந்த பம்ப் செட் அறைக்கு இழுத்துச்சென்று,

மாமல்லபுரம்-திருப்போரூர் அருகே, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.திருப்போரூர் அருகாமை பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி; அரசுப் பள்ளி நான்காம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை, இயற்கை உபாதை கழிக்க, வீட்டின் அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்றார்.அதே பகுதி, 16 வயது இளைஞன், சிறுமியை பாழடைந்த பம்ப் செட் அறைக்கு இழுத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டிற்கு அழுதவாறு சென்று, காமுகனின் கொடூர செயலை, தாயிடம் சிறுமி கூறினார்.பெற்றோர், மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையில் சேர்த்தனர். சிறுமியின் தந்தை, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 'போக்சோ'வில் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X