சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக நுழைவு வாயில் முன் நேற்று மாலை 4:00 மணியளவில், ஒருவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டார். உடன் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.மூங்கில்துறைப்பட்டு, தேவி நகரைச் சேர்ந்த சையது மக்புல் மகன் மெகராஜ், 35; என்பதும்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக நுழைவு வாயில் முன் நேற்று மாலை 4:00 மணியளவில், ஒருவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டார். உடன் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.மூங்கில்துறைப்பட்டு, தேவி நகரைச் சேர்ந்த சையது மக்புல் மகன் மெகராஜ், 35; என்பதும், திருவண்ணாமலையில் திருமண மையம் நடத்தி வருவதும் தெரிந்தது.கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக தனது அக்கா கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டுள்ளனர்.இது தொடர்பாக மெகராஜ் அளித்த புகாரின் பேரில், மேல்சிறுவள்ளூரைச் சேர்ந்த அக்பர்கான் மகன்கள் பைசல், 24; தபீரேஸ், 21; ஆகியோரை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்துள்ளனர்.தன்னை தாக்கியவர்களை போலீசார் ஜாமினில் விடுவித்ததை கண்டித்து, மெகராஜ் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.பின் போலீசார், மெகராஜிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.கள்ளக்குறிச்சி போலீசார், மெகராஜ் மீது வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X