பொது செய்தி

இந்தியா

முன்களப் பணியாளர்களுக்கு கவர்னர் பரிசு வழங்கல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு, கவர்னர் தமிழிசை பரிசு வழங்கின பாராட்டினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வாரந்தோறும் வியாழக்கிழமை கவர்னர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த வாரம், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றதால், ஆய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.கவர்னர் மாளிகையில் நடந்த

புதுச்சேரி-கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு, கவர்னர் தமிழிசை பரிசு வழங்கின பாராட்டினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வாரந்தோறும் வியாழக்கிழமை கவர்னர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த வாரம், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றதால், ஆய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு, கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா, உள்ளாட்சி துறை செயலர் வல்லவன், சுகாதாரத் துறை செயலர் அருண், செய்தித்துறை செயலர் உதயகுமார், கவர்னரின் தனி செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி கலந்து கொண்டனர்.ஜிப்மர் இயக்குநர் ராஜேஷ் அகர்வால், கொரோனா மேலாண் பொறுப்பதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவன பிரதிநிதி சாய்ராபானு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, மாநிலத்தில் கொரோனா தடுப்பு நிலவரம், செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி விகிதம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு கவர்னர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X