பொது செய்தி

தமிழ்நாடு

அகரத்தில் நெசவு தொழில்; ஆதாரங்கள் கண்டெடுப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்திலும் நெசவு தொழில் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு தலையலங்கார பொம்மை, சுடுமண் அச்சு, தந்த மோதிரம்உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கீழடியில் நெசவு தொழில் நடந்ததற்கு சான்றாக தக்கழி, சுடுமண் ஊசி, நெசவு தொழில் சக்கரம், நுால் நுாற்பு கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
 அகரத்தில் நெசவு தொழில்; ஆதாரங்கள் கண்டெடுப்பு

திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்திலும் நெசவு தொழில் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு தலையலங்கார பொம்மை, சுடுமண் அச்சு, தந்த மோதிரம்உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் நெசவு தொழில் நடந்ததற்கு சான்றாக தக்கழி, சுடுமண் ஊசி, நெசவு தொழில் சக்கரம், நுால் நுாற்பு கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. அகரத்திலும் முதன் முதலாக நூற்பு கதிர், நுண் கற்கால கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கீழடி, அகரம் ஆகிய இரண்டு இடங்களிலும் நெசவு தொழில் நடந்திருக்கலாம் அல்லது அகரத்தில் நுால்களை நெய்து அதனை கீழடிக்கு கொண்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஏழாம் கட்ட அகழாய்வில் கீழடியில் நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் ஊசிகள், தக்கழிகள், சக்கரங்கள் அதிகளவில் இம்முறை கிடைத்துள்ளன. செப்டம்பர் 30க்குள் அகழாய்வு பணிகள் நிறைவடைய உள்ளதால் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X