தமிழ்நாடு

டெங்கு ஒழிப்பு பணியில் 653 களப்பணியாளர்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சிவகங்கை : ''டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாவட்டத்தில் 653 களப்பணியாளர்கள் வீடுகளில் கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்்,'' என சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஜன., முதல் ஆக., வரை 'எலைசா' டெஸ்டில் 123 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் 6 பேருக்கு

சிவகங்கை : ''டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாவட்டத்தில் 653 களப்பணியாளர்கள் வீடுகளில் கொசுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்்,'' என சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஜன., முதல் ஆக., வரை 'எலைசா' டெஸ்டில் 123 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் 6 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதியானது. ஆக.,ல் மட்டுமே சாக்கோட்டை, கீழப்பூங்குடியில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. தேவகோட்டை, சிவகங்கை, எஸ்.புதுார், கல்லல், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு எலி காய்ச்சல் உறுதியானது.

'டெங்குவை' ஒழிக்க 653 களப்பணியாளர்

டெங்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து 653 களப் பணியாளர்களை கொண்டு வீடுகள்தோறும் கொசு ஒழிப்பு பணி, பிளீச்சிங் பவுடர் தெளித்தல் நடக்கிறது. எலிக்காய்ச்சல் உள்ளோருக்கு வழங்க 'டாக்ஸிசைக்ளின்' மாத்திரை கைவசம் உள்ளன. மழை காலத்தில் குடிநீர் தொட்டியை குளோரினேஷன் செய்ய வேண்டும். சுடுநீர் தான் குடிக்க வேண்டும்.

5.70 லட்சம் தடுப்பூசி வழங்கல்

மாவட்டத்தில் 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம். இது வரை 5 லட்சத்து 6 ஆயிரத்து889 கோவிஷீல்டு, 60 ஆயிரத்து 981 கோவேக்சின்தடுப்பூசி என 5.70 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். தற்சமயம் கோவிஷீல்டு 24,000, கோவேக்சின் 6000 டோஸ் இருப்பு உள்ளன. மாவட்ட அளவில்66 சதவீத கர்ப்பிணிகள்தடுப்பூசி செலுத்தி விட்டனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X