பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபா தேர்தலில் போட்டியா? பா.ஜ., மேலிட பார்வையாளர் பேட்டி

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார்.புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில், நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில், கட்சியின் மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி மாநிலம் 70 சதவீதம் தடுப்பூசி இலக்கினை

புதுச்சேரி-ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும் என பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார்.புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில், நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில், கட்சியின் மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி மாநிலம் 70 சதவீதம் தடுப்பூசி இலக்கினை எட்டியுள்ளது. வரும் 30ம் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பூத்திற்கு 2 பேர் வீதம் பா.ஜ., நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.ஒவ்வொரு பூத்திலும் 10 பேர் பா.ஜ.வில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பூத் அளவில் பா.ஜ., பலம் பெற்றுள்ளது.புதுச்சேரி பட்ஜெட்டை இன்னும் வாசிக்கவில்லை. எனவே அதுகுறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ., தயாராக உள்ளது. வார்டுகள் தொகுதி மாறியுள்ளன. எனவே மறு வரையறை செய்ய வேண்டியது முக்கியம். பா.ஜ., நிர்வாகிகள் மீது ஏதேனும் புகார் இருந்தால், போலீஸ் ஸ்டேஷனில் தாராளமாக புகார் அளிக்கலாம். கொரோனா முடிந்த பின்பு உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். மேகதாது அணை பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு எட்டப்படும். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது பற்றி, தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X