பொது செய்தி

இந்தியா

சிறையில் இறந்த கைதியின் உடலை வாங்க மறுப்பு: முதல்வரிடம் கோரிக்கை

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சிறையில் இறந்த கைதி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர்.காரைக்கால், திருநகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அசோக் (அ) அசோக்குமார், 42. இவர், போலி ஆவணம் தயாரித்து, காரைக்கால் பேராசிரியை மும்தாஜ் பேகத்திற்கு சொந்தமான ஒன்னே முக்கால் ஏக்கர் நிலத்தை பதிவு செய்ய முயன்ற வழக்கில் கைதானார் கடந்த 14ம் தேதி காலாப்பட்டு

புதுச்சேரி-சிறையில் இறந்த கைதி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர்.காரைக்கால், திருநகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அசோக் (அ) அசோக்குமார், 42. இவர், போலி ஆவணம் தயாரித்து, காரைக்கால் பேராசிரியை மும்தாஜ் பேகத்திற்கு சொந்தமான ஒன்னே முக்கால் ஏக்கர் நிலத்தை பதிவு செய்ய முயன்ற வழக்கில் கைதானார் கடந்த 14ம் தேதி காலாப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.நீரிழிவு நோயாளியான அசோக்கிற்கு தினசரி காலை, மாலையில் இன்சூலின் மருந்து, சிறை மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு, அசோக், திடீரென மயங்கி விழுந்தார். உடனே காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.அவரது உடல், அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. மாஜிஸ்திரேட் யுவராஜ், அசோக்குமார் உடலை நேற்று நேரில் பார்வையிட்டார்.பின்பு, ஜிப்மர் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் யுவராஜ் முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது, வீடியோ பதிவு செய்யப்பட்டது.உடல் உபாதையால் அசோக் இறந்தது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்பு, அசோக் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர்.அசோக் இறப்பிற்கான உண்மையான காரணம், இறந்த அசோக் மனைவிக்கு அரசு வேலை, அவரது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணங்களை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து, வலியுறுத்தினர்.இறுதிச் சடங்கை முடித்து விட்டு வாருங்கள் என முதல்வர் கூறினார்.அதைத் தொடர்ந்து, அசோக் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X