பொது செய்தி

இந்தியா

ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ சொற்பொழிவு

Added : செப் 05, 2021
Share
Advertisement
பாகூர்-கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், இரண்டாம் ஆண்டு மருத்துவ சொற்பொழிவு நடந்தது.கல்லுாரி நிறுவனர் சண்முகசுந்தரம், அன்னபூரணி சண்முகசுந்தரம் பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை டீன் கோட்டூர் வரவேற்றார்.விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை வேந்தர் கணேசன் தலைமை தாங்கினார்.இயக்குனர் அனுராதா கணேசன், மேலாண் குழு

பாகூர்-கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், இரண்டாம் ஆண்டு மருத்துவ சொற்பொழிவு நடந்தது.கல்லுாரி நிறுவனர் சண்முகசுந்தரம், அன்னபூரணி சண்முகசுந்தரம் பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை டீன் கோட்டூர் வரவேற்றார்.விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை வேந்தர் கணேசன் தலைமை தாங்கினார்.இயக்குனர் அனுராதா கணேசன், மேலாண் குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல், துணைவேந்தர் சுதிர் வாழ்த்தி பேசினர்.பேராசிரியர் மகாலட்சுமி துவக்க உரையாற்றினார். பேராசிரியர் வித்யாவதி அறிமுக உரையாற்றினார். வேந்தர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் இரண்டாம் ஆண்டு மருத்துவ சொற்பொழிவு மலரை வெளியிட்டனர்.சிறப்பு விருந்தினர், பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் தேவராஜன், 'எகிப்திய மம்மிக்கள் முதல் ஸ்டெம்மிஸ் வரை மருத்துவம்- கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.கல்லுாரியின் அறிவியல் கழக உறுப்பினர் செயலர் தீபா தொகுப்புரையாற்றினார்.மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சிங், துணை பதிவாளர் பெருமாள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அறிவியல் கழகத்தினர் செய்தனர். அறிவியல் கழக தலைவர் உதயக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X