பொது செய்தி

இந்தியா

வடிகால் வாய்க்கால்களை துார்வார வலியுறுத்தல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பிருந்தாவனம் பகுதி மழை நீர் வடிகால் வாய்க்காலை துார் வார வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து உழவர்கரை நகர குழு தலைவர் நிலவழகன் மற்றும் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:பிருந்தாவனம் பகுதியில் ஆண்டுதோறும் மழைநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து சேதம்

புதுச்சேரி-பிருந்தாவனம் பகுதி மழை நீர் வடிகால் வாய்க்காலை துார் வார வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து உழவர்கரை நகர குழு தலைவர் நிலவழகன் மற்றும் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:பிருந்தாவனம் பகுதியில் ஆண்டுதோறும் மழைநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது.பல பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை நீர் ஜீவா நகரில் ஒருங்கிணைந்து கால்வாயாக மாறி, சுமார் 4 கி.மீ., துாரம் சென்று கடலில் கலக்கிறது.அதே வேளையில் மழைநீரை கடலில் சேர்க்கும் கால்வாயாகவும் திகழ்கிறது. பல ஆண்டுகளாக இந்த கால்வாயை துார் வாரவில்லை.இதனால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற வழியின்றி பக்கவாட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பாய்கிறது.எதிர்வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் அனைத்து சாக்கடை மற்றும் கால்வாய்களை உடனடியாக துார் வார வேண்டும். கால்வாய்க்கு பக்கச்சுவர் அமைத்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X