வேகமாக செல்லும் ஆட்டோக்களால் பாதிப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் அதிவேகமாக இயக்கப்படும் ஆட்டோக்களால் தினசரி விபத்து நிகழ்ந்து வருகின்றன.திருப்புவனத்தில் புதுார், கோட்டை பஸ் ஸ்டாப், நரிக்குடி ரோடு, மடப்புரம் விலக்கு உள்ளிட்ட இடங்களில் ஸ்டாண்ட் அமைத்து ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் உரிய உரிமம் இன்றி முறைகேடாக இயங்கி வருகின்றன. சில ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் அதிவேகமாக இயக்கப்படும் ஆட்டோக்களால் தினசரி விபத்து நிகழ்ந்து வருகின்றன.

திருப்புவனத்தில் புதுார், கோட்டை பஸ் ஸ்டாப், நரிக்குடி ரோடு, மடப்புரம் விலக்கு உள்ளிட்ட இடங்களில் ஸ்டாண்ட் அமைத்து ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் உரிய உரிமம் இன்றி முறைகேடாக இயங்கி வருகின்றன. சில ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை கவர அதிவேகத்தில் இயக்குகின்றனர்.

நேற்று முன்தினம் நயினார் பேட்டை அருகே அதிவேகத்தில் வந்த ஆட்டோ டவுன் பஸ் மீது மோதியதில் ஆட்டோவில் வந்த ஆதிலட்சுமி, வினிதா, ஆதீஸ்வரன் மூவர் காயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில்பைபாஸ் ரோட்டில் ஆட்டோவும், டூவீலரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் டூவீலரில் வந்த சதீஸ்குமார் 32, என்பவர் காயமடைந்தார்.இரு சம்பவங்கள் குறித்தும் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். அதிவேகத்தில் பறக்கும் ஷேர் ஆட்டோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X