பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை-மேலூர் பஸ்கள் ரத்து; ஆசிரியர், மாணவர்கள் சிரமம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை-மேலுார் இடையே இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆசிரியர், மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.சிவகங்கை - மேலுார் இடையே சக்கந்தி, இடையமேலுார், வி.மலம்பட்டி, சாலுார், நயத்தான்பட்டி, கோட்டைபட்டினம், மேலுார் இடையே அரசு தொடக்க, உயர், மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிக்கு சிவகங்கை, மேலுாரில் இருந்து ஆசிரியர், மாணவர்கள் சென்று

சிவகங்கை : சிவகங்கை-மேலுார் இடையே இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆசிரியர், மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சிவகங்கை - மேலுார் இடையே சக்கந்தி, இடையமேலுார், வி.மலம்பட்டி, சாலுார், நயத்தான்பட்டி, கோட்டைபட்டினம், மேலுார் இடையே அரசு தொடக்க, உயர், மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிக்கு சிவகங்கை, மேலுாரில் இருந்து ஆசிரியர், மாணவர்கள் சென்று வருகின்றனர். விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை சந்தைக்கு எடுத்து செல்கின்றனர்.

இவர்கள் சிவகங்கை - மேலுார் இடையே இயங்கும் அரசு டவுன் பஸ்களை நம்பித்தான் இருந்தனர். மக்களின் வசதிக்காக சிவகங்கை, மதுரை கிளையிலிருந்து தலா 2 பஸ்கள் வீதம் 4 பஸ்கள் ஓடின. செப்., 1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கிறது.இதற்காக டவுன் பஸ்சில்செல்ல ஏராளமான மாணவர், ஆசிரியர்கள்சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர்.

ஆனால் 4 டவுன் பஸ்கள் இயங்கிய இடத்தில்ஒரு பஸ் மட்டுமே ஓடுவதால் போதிய பஸ் வசதியின்றி ஆசிரியர்கள் ஆட்டோவில் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பிற்கு பின் வருவாய் பாதிக்கும் என்பதற்காக பஸ்களை நிறுத்தியதாக புகார் தெரிவிக்கின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சிவகங்கை-மேலுார் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

செப்.,6 முதல் பஸ் ஓடும்

சிவகங்கை கோட்ட மேலாளர் அழகர்சாமி கூறியதாவது:பஸ் பழுது பார்க்கும் பணிக்கு சென்றதால் இயக்க முடியவில்லை. செப்.,6 முதல் சிவகங்கை --மேலுார் இடையே வழக்கமான பஸ்கள் ஓடும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X