பொது செய்தி

இந்தியா

அமைச்சர் பேச்சுவார்த்தையில் சுமூகம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்து மூன்று மீனவ கிராம பிரமுகர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, மீனவர்கள் இன்று முதல் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர்.புதுச்சேரியில் சுருக்குவலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டிணம், நல்லவாடு கிராம

புதுச்சேரி-சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்து மூன்று மீனவ கிராம பிரமுகர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, மீனவர்கள் இன்று முதல் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர்.புதுச்சேரியில் சுருக்குவலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டிணம், நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே கடந்த 28ம் தேதி மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 900 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.மூன்று மீனவ கிராமங்களிலும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 144 தடை உத்தரவு காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இந்நிலையில், மூன்று மீனவ கிராம முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் தட்சணாமூர்த்தி, அனிபால்கென்னடி முன்னிலை வகித்தனர்.போலீஸ் எஸ்.பி.,க்கள் மோகன்குமார், ரட்சனாசிங், ஜிந்தா கோதண்டராமன், சுபம் கோஷ் சுந்தர் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையில், வரும் அக்டோபர் மாதம் வரை தற்போதைய மீன்பிடி முறை தொடரும். அதன்பிறகு கோர்ட் உத்தரவை மீனவ கிராம பஞ்சாயத்துகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுசம்பந்தமாக மீனவ கிராம பஞ்சாயத்துகளில் கருத்து கேட்பு நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், ' மீனவ கிராம மோதல் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீனவர்கள் இன்று(5ம் தேதி) முதல் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X