பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் களஞ்சியமாக 'சார்ஜ்ஷீட்' இருப்பது அவசியம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சிவகங்கை : ''போலீஸ் அதிகாரி தயாரிக்கும் குற்றப்பத்திரிகை முழு தகவலுடன் கூடிய 'தகவல் களஞ்சியமாக' இருந்தால் மட்டுமே சரியான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர், '' என சிவகங்கையில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதி சாய் பிரியா பேசினார்.குழந்தை நல போலீசாருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

சிவகங்கை : ''போலீஸ் அதிகாரி தயாரிக்கும் குற்றப்பத்திரிகை முழு தகவலுடன் கூடிய 'தகவல் களஞ்சியமாக' இருந்தால் மட்டுமே சரியான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர், '' என சிவகங்கையில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதி சாய் பிரியா பேசினார்.

குழந்தை நல போலீசாருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் வரவேற்றார்.மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதி சாய் பிரியா பேசியதாவது:குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது போலீசார் தயாரிக்கும் குற்றப்பத்திரிகை முழு தகவல்களும் அடங்கிய 'தகவல் களஞ்சியம்' (என்சைக்ளோபீடியா) போல் இருக்க வேண்டும். அப்போது தான் சரியான குற்றவாளிக்கான தண்டனை கிடைத்துள்ளதை உறுதி செய்ய முடியும்.

சிறுவர்களை குற்ற செயலில் ஈடுபடுத்துவது மிகப்பெரிய குற்றமாகும். அதை தடுக்க வேண்டும். போலீசார் சட்டம் ஒழுங்கை காப்பதில் அதிக செயல்திறன் வளர்க்க வேண்டும். இதற்காகவே திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 47 கோடி சிறுவர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக போலீசார் திகழ வேண்டும். பாதிப்பிற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கருணை உள்ளத்தோடு அணுகி, அவர்களை காப்பது நம் கடமை.

சமுதாயத்திற்கு எதிரானது

சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் பேசியதாவது:குழந்தைகளுக்கு எதிராகநடக்கும் குற்றத்தை, சமுதாயத்திற்கு எதிரானதாக கருத வேண்டும். குற்றம் நடந்த பின் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதை விட, குற்றமே நடக்காமல் கண்காணிக்க வேண்டியது ஒவ்வொரு போலீசாரின் கடமை. குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் குறித்து உரிய பாதுகாப்புடன் விசாரிக்க ஒரு ஸ்டேஷன் தோறும் குழந்தை நல போலீஸ் உள்ளனர், என்றார்.

'போஸ்கோ' நீதிமன்ற சிறப்பு நீதிபதி பாபுலால், தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், இளைஞர் நீதி குழும தலைவர் இனியாகருணாகரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் அழகுமணி, நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார், குழந்தை உரிமை செயல்பாட்டாளர் புஷ்பவனம், சைல்டு லைன் இயக்குனர்வனராஜன், குழந்தைகள் நலக்குழு தலைவர் சரளா, கூடுதல் எஸ்.பி., முரளீதரன், இன்ஸ்பெக்டர் விஜயா பங்கேற்றனர். கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X