பொது செய்தி

இந்தியா

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்: நாராயணசாமி

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் கூறி உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.அவர் அளித்த பேட்டி:பொது சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து, எதிர் கட்சிகள் பலகட்ட போராட்டம் அறிவித்துள்ளன. அதன்படி,

புதுச்சேரி-'பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் கூறி உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி:பொது சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து, எதிர் கட்சிகள் பலகட்ட போராட்டம் அறிவித்துள்ளன. அதன்படி, புதுச்சேரியில் காங்., கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் 15 முதல் 20 நாட்கள் நடைபெறும். தற்போதைய கூட்டத்தொடர் 8 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. சட்டசபையில் முதல்வரும், அமைச்சர்களும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.அதில் பெரும்பாலான அறிவிப்புகள் காங்., ஆட்சியில் கோப்புகள் தயாரித்து கவர்னருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அப்போது கவர்னராக இருந்த கிரண்பேடி, நிதி ஆதாரம் வழங்காமல் தடுத்து நிறுத்தினார்.ரேஷன் கடை திறப்பு அறிவிப்பை வரவேற்கிறேன். புதுச்சேரி மாநில மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசின் உத்தரவு உள்ளது. அந்த உத்தரவு மாற்றப்பட்டுள்ளதா. ரேஷன் கடை திறப்பு தொடர்பாக மத்திய அரசை அணுகினீர்களா.சட்டசபையில் அறிவித்த திட்டங்களை பட்ஜெட்டில் உள்ள நிதியில் வழங்க முடியுமா என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.கொரோனா 3ம் அலை பரவும் என எச்சரித்து, மத்திய அரசும், தமிழக அரசும் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கவர்னர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாட வேண்டும் என்பதே எனது விருப்பம். புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இதை கூறுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X