பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துார்-பெங்களூரு பஸ் விட கோரிக்கை

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துாரிலிருந்து திருப்பூர், பெங்களுரு செல்ல நேரடி பஸ் வசதி துவங்க பயணிகள் கோரியுள்ளனர்.சிவகங்கையில் கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள திருப்புத்துார் பகுதியில் மழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாததால் திருப்புத்துார் மற்றும் சுற்றுப்புறக் கிராமத்தினர் வெளிநாடு,வெளியூருக்கு சென்று வேலை பார்க்கின்றனர்.தற்போது திருப்பூர், பெங்களூரு, சென்னை

திருப்புத்துார் : திருப்புத்துாரிலிருந்து திருப்பூர், பெங்களுரு செல்ல நேரடி பஸ் வசதி துவங்க பயணிகள் கோரியுள்ளனர்.

சிவகங்கையில் கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள திருப்புத்துார் பகுதியில் மழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாததால் திருப்புத்துார் மற்றும் சுற்றுப்புறக் கிராமத்தினர் வெளிநாடு,வெளியூருக்கு சென்று வேலை பார்க்கின்றனர்.தற்போது திருப்பூர், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு இப்பகுதியினர் அதிகமாக செல்கின்றனர். அரசு, தனியார் பஸ்கள் மூலம் சென்னை செல்லும் வசதி உள்ளது. ஆனால் திருப்பூர்,பெங்களூரு செல்ல மதுரை, காரைக்குடிக்குபயணிகள் செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக பெங்களுருக்கு செல்ல சில ஆண்டுகளுக்கு முன் திருப்புத்துாரில் அரசு பஸ் வசதி இருந்தது. இரவு 7:30 மணி அளவில் சென்ற பஸ் பலருக்கும் உபயோகமாக இருந்தது.தற்போது காரைக்குடியிலிருந்து இரவு 7:30, 8:00, 9:00 மணியளவில் பெங்களூரு செல்லும் அரசு பஸ்சில் ஒன்று திருப்புத்துாரிலிருந்து புறப்பட்டு சென்றால் இப்பகுதி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் திருப்பூருக்கு நேரடி வழித்தடத்தில் பஸ் விடவும் பயணிகள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X