பொது செய்தி

தமிழ்நாடு

யோகாவில் கலக்கும் பள்ளி மாணவி; பத்மாசனத்தில் அமர்ந்தபடி நடக்கும் அதிசயம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் ஆணிமுத்து பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் ரதி. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா ஜெயசங்கர் பழைய காகித வியாபாரம் பார்த்து வருகிறார். அம்மா வாசுகி குடும்பதலைவி.ரதி 3 வயது முதல் யோகா பயிற்சி செய்து வருகிறார். சிறுவயதில் பள்ளியில் யோகா சொல்லி கொடுத்ததை மிகவும் ஆர்வமாக கற்று வந்த ரதி, அதை வீட்டிலும் பயிற்சி செய்து வந்தார்.
 யோகாவில் கலக்கும் பள்ளி மாணவி;   பத்மாசனத்தில் அமர்ந்தபடி நடக்கும் அதிசயம்

விருதுநகர் : விருதுநகரில் ஆணிமுத்து பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் ரதி. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா ஜெயசங்கர் பழைய காகித வியாபாரம் பார்த்து வருகிறார். அம்மா வாசுகி குடும்பதலைவி.

ரதி 3 வயது முதல் யோகா பயிற்சி செய்து வருகிறார். சிறுவயதில் பள்ளியில் யோகா சொல்லி கொடுத்ததை மிகவும் ஆர்வமாக கற்று வந்த ரதி, அதை வீட்டிலும் பயிற்சி செய்து வந்தார். யாரிடமும் பயிற்சி எடுத்ததில்லை. பள்ளியில் கற்று கொடுத்ததை தானே பலமுறை பயிற்சி செய்து தன்னை மெருகேற்றி கொண்டார்.

வியாக்ராசனம், திம்பாசனம், திரிவிக்ரமாசனம், நடராஜாசனம், விருச்சிகாசனம் உள்ளிட்ட பல யோகாசனங்களை எளிதாக செய்து அசத்துகிறார். யோகாசனங்களை செய்தபடியே நடக்கவும் செய்கிறார்.பத்மாசனத்தில் அமர்ந்தவாறு முழங்காலிட்டு நடக்கிறார். வியாக்ராசன நடைபயிற்சி, திம்பாசன நடைபயிற்ச்சி போன்றவைகளையும் செய்து பிரமிக்க வைக்கிறார்.

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார்.இரண்டு முறை டில்லியில் நடந்த தேசிய யோகாசன போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் ஒருமுறை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

டெல்லியில் நடந்த தேசிய யோகாசன ஆர்ட்டிஸ்டிக் எனும் நடன யோகா பிரிவில் ரதி ,அவரது சகோதரி ஜான்சி ராணியுடன் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X