பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்//

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஆசிரியர் தின விழாவிருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. உதவிப்பேராசிரியர் நான்சி பியூலா வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ரவிசேகர், புரவலர் மகேந்திரன், தலைவர் மகேஷ்பாபு, முன்னாள் கல்லுாரி முதல்வர் கண்ணகி பேசினர். கூட்டு செயலாளர் ராதிகா வன்னி ஆனந்தம், பொருளாளர் இன்பசேகரன், முதல்வர் மீனாராணி பங்கேற்றனர்.

ஆசிரியர் தின விழா

விருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. உதவிப்பேராசிரியர் நான்சி பியூலா வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ரவிசேகர், புரவலர் மகேந்திரன், தலைவர் மகேஷ்பாபு, முன்னாள் கல்லுாரி முதல்வர் கண்ணகி பேசினர். கூட்டு செயலாளர் ராதிகா வன்னி ஆனந்தம், பொருளாளர் இன்பசேகரன், முதல்வர் மீனாராணி பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் காவேரி நன்றி கூறினார்.

உணவு ஆலோசனை மையம் துவக்கம்

விருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் வைர விழா, உலக சத்துணவு வார விழாவை முன்னிட்டு மனையியல் துறையின் கீழ் உணவு ஆலோசனை மையம் இணைய வழியாக துவங்கப்பட்டது. துறை தலைவர் விஜயராணி வரவேற்றார். செயலாளர் ரவிசேகர் துவங்கி வைத்தார். தலைவர் மகேஷ்பாபு, துணை தலைவர் வித்யாராஜன், கூட்டு செயலாளர் ராதிகா வன்னி ஆனந்தம், பொருளாளர் இன்பசேகரன், முதல்வர் மீனாராணி, குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் மோனிஷா வெங்கடேஷ் பேசினர். பேராசிரியர் பாலசரஸ்வதி நன்றி கூறினார்.

தேசிய விளையாட்டு விழா

விருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லுாரியில் உடற்கல்வி துறை சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இணைய வழியில் வினாடி வினா போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் பேசினார். ஏற்பாடுகளை துறை தலைவர் குழந்தைவேலு, பேராசிரியர்கள் ராஜேஷ், செல்வகுமார், இயக்குனர் முருகேசன், பயிற்றுனர் ரேவதி செய்தனர். பங்கேற்றவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.

மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர்: செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் மத்திய அரசின் டி.பி.டி., நட்சத்திர கல்லுாரி திட்டத்தின் மூன்று நாட்கள் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு இணைய வழியில் நடந்தது. பேராசிரியர் விஜயலலிதா வரவேற்றார். முதல்வர் சுந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். சுயநிதி பாட பிரிவு ஒரங்கிணைப்பாளர் பழனியப்பன், இயற்பியல் துறை தலைவர் பிரிதிவிக்குமரன், எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் ரம்யா, குறிஞ்சிபாடி திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரி துணை முதல்வர் மலர்ஒலி ராஜன், சவுதி அரேபியா மருத்துவ கல்லுாரி பேராசிரியர் சுகப்ரியா, பேராசிரியர் லாவண்யா, கோயம்புத்துார் என்.ஜி.பி., கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ரங்கராமானுஜம், கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் பிரேம்சங்கர் பேசினர். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சண்முக பிரபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் கோவிந்தராஜன், சிவா, பால்பெருமாள், ஹரிநாதன், சுசித்ரா செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X