தமிழ்நாடு

வாடகை கட்டடங்களில் இயங்குகிறது அரசு நூலகங்கள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் பல்வேறு அரசு நுாலகங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில், கட்டடம் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் இடம் ஒதுக்கி தர மறுப்பது, காலதாமதம் செய்வதை தடுக்க இதன் மீது கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டும்.விருதுநகரில் மாவட்ட மைய நுாலகம், தாலுகா நகரங்களில் முழுநேர கிளை நுாலகங்கள், கிராமங்களில் ஊர்ப்புற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் பல்வேறு அரசு நுாலகங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில், கட்டடம் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் இடம் ஒதுக்கி தர மறுப்பது, காலதாமதம் செய்வதை தடுக்க இதன் மீது கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டும்.

விருதுநகரில் மாவட்ட மைய நுாலகம், தாலுகா நகரங்களில் முழுநேர கிளை நுாலகங்கள், கிராமங்களில் ஊர்ப்புற நுாலகங்கள் , பகுதி நேர நுாலகங்கள் உட்பட நுாற்றுக்கு மேற்பட்டநுாலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதை அந்தந்த பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்தி அரசு பணிக்கு தயாராகி வருகின்றனர்.

மாவட்டத்தில் தற்போது பெரும்பாலானநுாலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. தற்போது ஒவ்வொரு நுாலகத்திற்கும் புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் அதைபடிக்க வரும் வாசகர்களும் உயர்ந்து வருகின்றனர். இதனால் போதிய இட வசதி இன்றி புத்தகங்கள் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. போதிய இருக்கை இல்லாமல் வாசகர்கள் ஆங்காங்கே உட்கார்ந்து படிக்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட மாவட்ட அரசு நுாலக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இதற்காக நுாலகங்கள் அமைந்துள்ள பகுதி நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் உள்ளாட்சி துறை அதிகாரிகள் இதில் போதிய அக்கறை இன்றி அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர். இடம் தரவும் மறுக்கின்றனர் .

அதற்கான கோப்பினையும் கிடப்பில் போட்டு மேல் அதிகாரிகளிடம் கேட்க வேண்டும் என கூறி சுத்த விடுகின்றனர். இதனால் பல்வேறு நுாலகங்களுக்கு இன்றுவரை சொந்த கட்டடங்கள் இல்லாத நிலை உள்ளது.

அரசுக்கு நிலங்கள் தனி நபர்கள், அரசியல்வாதிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யப்படும் நிலையில், எதிர்கால இளைஞர் சமுதாயத்தின் நலன் கருதி செயல்படும் நுாலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட போதிய இடம் ஒதுக்கி தர ,அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களை கலெக்டர் அறிவுறுத்த வேண்டும் ................

தாமதமின்றி இடம் ஒதுக்குங்க

இன்றைய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக விளங்கும் நுாலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருவது வேதனைக்குரியது.இதில் கலெக்டர் ,நுாலகத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, அனைத்து நூலகங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமின்றி இடம் ஒதுக்க கலெக்டரின் தொடர் கண்காணிப்பும் மிகவும் அவசியமாகும். -முனியப்பன், நுாலக புரவலர், ஸ்ரீவில்லிபுத்துார்..................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X