பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கோ.புதுார் மேரி ஆன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் துணை முதல்வர் டேவிட் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் ஜெயபால் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு பண்புகள் குறித்து பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு, பென்சிலால் வரையப்பட்ட அவர்களின் உருவப்பட ஓவியங்கள்

மதுரை : மதுரையில் பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கோ.புதுார் மேரி ஆன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் துணை முதல்வர் டேவிட் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் ஜெயபால் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு பண்புகள் குறித்து பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு, பென்சிலால் வரையப்பட்ட அவர்களின் உருவப்பட ஓவியங்கள் வழங்கப்பட்டது.

* நாகமலைபுதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகள் சார்பில் தாளாளர் செந்தில்ரமேஷ் தலைமையில் விழா நடந்தது. ஆசிரியை ரீனா வரவேற்றார். மேல்நிலை பள்ளி முதல்வர் கிருபாவதி உறுதிமொழி வாசித்தார். மதுரை, திருச்சி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகளின் முன்னாள் நிர்வாகி தயா சியாமளா பேசினார். முதல்வர் சீதாலட்சுமி, சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சபுரால்பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஆசிரியை ஷீபா தேவகனி நன்றி கூறினார்.

* மதுரை பாத்திமா கல்லுாரியில் செயலாளர் பிரான்சிஸ்கா புளோரா, முதல்வர் செலின் சகாயமேரி முன்னிலையில் விழா நடந்தது. கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் பேசுகையில், “ஆசிரியர் பணி என்பது கல்வியோடு மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை கற்றுக்கொடுக்கும் புனிதப் பணி. மாணவர் எண்ணங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற உறுதுணையாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்,” என்றார். ஆசிரியர் பணியில் வெள்ளிவிழா கண்ட பேராசிரியைகள் ரோஸ்மேரி யூப்ரேசியா, வரப்பிரசாதம் கிறிஸ்டி சாந்தி, சாந்தி, சாய்ரா பானு, விமலா மற்றும் அலுவலர்கள் அமிர்தம் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியைகள் ராகம், விஜயசாந்தி, ஜெயமாலா, ஜெனோவி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X