சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி கணவர் பலி; இழப்பீடு கோரி வழக்கு

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் வீட்டிற்கு முன் தொங்கிய கேபிளை அகற்றும் போது மின்சாரம் தாக்கி பலியான எலக்ட்ரீசியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் மின்வாரியம் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தத்தனேரி மெயின் ரோடு பாத்திமா தாக்கல் செய்த மனு: கணவர் எகியா 50. எலக்ட்ரீசியன். வீட்டின் அருகில் மின் ஒயர்கள் அடிக்கடி துண்டித்து விழும். கேபிள் 'டிவி'

மதுரை : மதுரையில் வீட்டிற்கு முன் தொங்கிய கேபிளை அகற்றும் போது மின்சாரம் தாக்கி பலியான எலக்ட்ரீசியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் மின்வாரியம் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தத்தனேரி மெயின் ரோடு பாத்திமா தாக்கல் செய்த மனு: கணவர் எகியா 50. எலக்ட்ரீசியன். வீட்டின் அருகில் மின் ஒயர்கள் அடிக்கடி துண்டித்து விழும். கேபிள் 'டிவி' ஒயர்கள் மின்கம்பங்களில் சுற்றப்பட்டு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு புகார் அளித்தும் கேபிள் 'டிவி' வயர்களை அகற்ற நடவடிக்கை இல்லை.2019 ஏப்.3ல் வீட்டு வாசலை மறைத்து தொங்கிய கேபிள் 'டிவி' ஒயரை கணவர் அப்புறப்படுத்த முயன்றார். மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கணவர் இறந்ததாக தெரிவித்தனர்.குடும்ப பொருளாதார சூழல் மோசமாக உள்ளது. ஆதரவின்றி வறுமையில் உள்ளேன். மின்வாரிய கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாத்திமா குறிப்பிட்டார்.நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி: மனுவை மதுரை மெட்ரோ மின்பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன் மனுதாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நிர்ணயிக்கப்படும் இழப்பீடு தொகையில் மனுதாரருக்கு திருப்தி ஏற்படாதபட்சத்தில் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X