இடம் மாற்றப்பட்ட கொரோனா இலவச தடுப்பூசி முகாம்; ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்| Dinamalar

தமிழ்நாடு

இடம் மாற்றப்பட்ட கொரோனா இலவச தடுப்பூசி முகாம்; ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

Added : செப் 05, 2021
Share
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை சார்பில் இளங்கோ மாநகராட்சிபள்ளியில் செயல்பட்ட கொரோனா இலவச தடுப்பூசி முகாம் மருத்துவ கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தடுப்பூசி செலுத்த குறைவான நபர்களே வருகின்றனர்.மாநகராட்சி பள்ளியில் முகாம் இருந்த போது தினமும் சராசரியாக 1500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மக்கள் கூட்டம்
இடம் மாற்றப்பட்ட கொரோனா இலவச தடுப்பூசி முகாம்; ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை சார்பில் இளங்கோ மாநகராட்சிபள்ளியில் செயல்பட்ட கொரோனா இலவச தடுப்பூசி முகாம் மருத்துவ கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தடுப்பூசி செலுத்த குறைவான நபர்களே வருகின்றனர்.

மாநகராட்சி பள்ளியில் முகாம் இருந்த போது தினமும் சராசரியாக 1500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆக., 23ல் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளிகள் செயல்பட துவங்கியுள்ளதால் தடுப்பூசி முகாம் காந்தி மியூசியம் அருகிலுள்ள அரசு மருத்துவ கல்லுாரி முன்புற வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு குறைந்ததால் பள்ளிக்கு செல்வோர் அங்கு தடுப்பூசி இல்லையென ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் தினமும் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

டீன் ரத்தினவேல் கூறியதாவது: இடம் மாறினாலும் அரசு மருத்துவமனை சார்பில் தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மக்கள் இதனை பயன்படுத்திட வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் மாலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை அதிகம் வருகின்றனர். காலையில் நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். காபி, டீ குடித்து விட்டு வந்து தடுப்பூசி செலுத்தலாம். அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 2800 பேர் உள்ளனர். இவர்களை பார்க்க வரும் உறவினர்களுக்கும் அந்த வார்டு ஓய்வறையில் தடுப்பூசி முகாம் அமைக்க உள்ளோம். செப்., 5 முதல் இத்திட்டம் செயல்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X