பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை : 'தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியது.இதன் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் அண்ணாமலைராஜன் முன்னிலை வகித்தார். வட்ட கிளை தலைவர் சுரேஷ் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சுருளிராஜ்

மதுரை : 'தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியது.

இதன் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் அண்ணாமலைராஜன் முன்னிலை வகித்தார். வட்ட கிளை தலைவர் சுரேஷ் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சுருளிராஜ் கோரிக்கைகளை விளக்கினார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், இளங்கோ, பாலகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

வட்ட கிளை, மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை விரைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனாவை காட்டி நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை மாநில அரசு உடன் வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியான நாலரை லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X