பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
தடுப்பூசி முகாம்மதுரை: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முதல்வர் சுஜாதா துவக்கி வைத்தார். வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் தடுப்பூசி

தடுப்பூசி முகாம்

மதுரை: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முதல்வர் சுஜாதா துவக்கி வைத்தார். வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

வகுப்பறையில் ஆன்லைன் கல்வி

ஊமச்சிகுளம்: அரசு உயர்நிலை பள்ளியில் நேரடி வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு வியூ போர்டு மூலம் ஆன்லைனிலும் பாடம் கற்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் பத்தாம் வகுப்பை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்கின்றனர். கற்றல் எளிமையாக்கப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர் திவ்யநாதன் தெரிவித்தார். ஆசிரியர்கள் முரளிதரன், பாண்டியராஜன், மனோகரன், ராணி நித்யா பங்கேற்றனர்.

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு

மதுரை: திருஞானம் துவக்க பள்ளி சார்பில் மேலமடை, சிந்தாமணி மக்களுக்கு தண்ணீர் சேமிப்பு மற்றும் பயன்பாடு குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மலர்விழி தலைமை வகித்தார். நிர்வாகி புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சரவணன் மழைநீர் சேமிப்பு குறித்து விளக்கினார். ஆசிரியைகள் உஷாதேவி, சுமதி, கீதா, பிரேமலதா, தங்கலீலா, சரண்யா, சித்ராதேவி ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X