ஜே.இ.இ., தேர்வு மோசடி; விசாரிக்க காங்., வலியுறுத்தல்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-'ஜே.இ.இ., முதன்மை தேர்வுத் தாள் கசிந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்' என, காங்., கோரிக்கை விடுத்துஉள்ளது.நாடு முழுதும் உள்ள உயர் கல்வி தொழில்நுட்ப மையங்களில் சேர, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மார்ச்சில் 'ஆன்லைன்' வாயிலாக நடந்த தேர்வில் கேள்வித் தாள் கசிந்த விவகாரம் பரபரப்பை

புதுடில்லி-'ஜே.இ.இ., முதன்மை தேர்வுத் தாள் கசிந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்' என, காங்., கோரிக்கை விடுத்துஉள்ளது.



latest tamil news



நாடு முழுதும் உள்ள உயர் கல்வி தொழில்நுட்ப மையங்களில் சேர, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மார்ச்சில் 'ஆன்லைன்' வாயிலாக நடந்த தேர்வில் கேள்வித் தாள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 'அபினிடி எஜுகேஷன்' என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்

மாணவர்களிடம் தலா 10 - 12 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, கம்ப்யூட்டரில் விடையளிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து டில்லியில், காங்., செய்தி தொடர்பாளர் கவுரவ் கூறியதாவது:நாட்டில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லுாரி களில் சேரும் கனவில் 22 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் கனவைப் பொசுக்குவது போல கேள்வித் தாள் மோசடி நடந்து உள்ளது.


latest tamil news


ஏற்கனவே பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹரியானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்வுத் தாள் கசிவு மோசடிகள் நடந்துள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வு மோசடி குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை நாடு முழுதும் இளைஞர் காங்., போராட்டம் நடத்த உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
05-செப்-202112:47:07 IST Report Abuse
PKN JEEல் மட்டுமா? நீட்டிலும் தான் பிரச்சினை. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பாஸ் பட்டியல் யாரென்றே ஒன்றிய அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆள் மாறி எழுதியவன் எப்படி score பண்ணான் Questionபேப்பர் அவருக்கு கிடைத்திருக்கும் கண்டிப்பாக தகுதி தேர்வுன்னா? இந்த மாதிரி தேர்வுகள்தானா? நீதிமன்றம் இதில் குற்றவாளி கிடைக்கவில்லை என்றால் தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
Rate this:
05-செப்-202113:53:05 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்உண்மை தான் :: CBSE தேர்வில் TN KARNATKA KERALA தான் முதல் 3 இடம் அனால் நீடில் எல்லாம் வட நாட்டங்கள் எப்படி இந்த கேடித்தனம் இந்த ஒன்றிய அரசின் வேலை...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-செப்-202112:03:08 IST Report Abuse
S.Baliah Seer இது போன்ற தேர்வுகளே மோசடி செய்யத்தான். காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுபோன்ற தேர்வுகளை ஒழிக்காமல், இப்போது வரட்டுக்கூச்சல் போடுவதால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை.
Rate this:
Rajas - chennai,இந்தியா
05-செப்-202118:51:29 IST Report Abuse
Rajasதேர்வுகளை ஒழிப்பதா? IAS/IPS போன்ற சிவில் தேர்வுகளையாவது நடத்தலாமா...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-செப்-202110:27:48 IST Report Abuse
duruvasar ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைத்து விசாரியுங்கள். தமிழகம் இதில் முன்னோடி. உயர் மட்டமான குழுவாக இருக்கவேண்டும் என்பது முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X