பொது செய்தி

தமிழ்நாடு

கே.புதுார் தொழிற்பேட்டைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

Added : செப் 05, 2021
Share
Advertisement
மதுரை : சட்டசபையில் 2021 - 22 ஆண்டிற்கான குறு, சிறு, நடுத்தர தொழில் கொள்கையின் தொலை நோக்கு திட்டத்தில்மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மடீட்சியா வரவேற்றுள்ளது.அதன் தலைவர் முருகானந்தம் கூறியதாவது: தமிழகத்தில் இயங்கும் 49.48 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களால் 92.73 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுஉள்ளனர். 2020

மதுரை : சட்டசபையில் 2021 - 22 ஆண்டிற்கான குறு, சிறு, நடுத்தர தொழில் கொள்கையின் தொலை நோக்கு திட்டத்தில்மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மடீட்சியா வரவேற்றுள்ளது.

அதன் தலைவர் முருகானந்தம் கூறியதாவது: தமிழகத்தில் இயங்கும் 49.48 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களால் 92.73 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுஉள்ளனர். 2020 ஏப்., முதல் 2021 மார்ச் வரை வங்கிகள் மூலம் குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1.05 கோடி வழங்கப்பட்டுஉள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் 30 சதவீத நிறுவனங்கள் தான் கடன் பெற்றுள்ளனர்.பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் தாரளமாக கடன் வழங்க வேண்டும்.

10 ஆண்டு தொழில் கொள்கை திட்டத்தில் ரூ.5 லட்சம்கோடி முதலீடு அதிகரித்தல், 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்குதல், ஏற்றுமதியை 15 சதவீதம் அதிகரித்தல், 1000 ஏக்கரில் நில வங்கி உருவாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலவளவில் 54 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அறிவிப்பை வரவேற்கிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X