காந்தி அரையாடை நூற்றாண்டு விழா; மதுரையில் செப்.22 நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி அரையாடை நூற்றாண்டு விழா; மதுரையில் செப்.22 நடக்கிறது

Added : செப் 05, 2021
Share
மதுரை : மகாத்மாகாந்தியடிகள் மதுரையில் வழக்கறிஞர் உடையை துறந்து அரையாடை அணிந்ததன் நுாற்றாண்டு விழா செப்., 22 காந்தி மியூசியத்தில் கொண்டாடப்படுகிறது.மியூசிய துணைத்தலைவர் மாணிக்கம், உறுப்பினர் பாலசுந்தரம் கூறியதாவது: மேலமாசி வீதியில் உள்ள 251 ஏ இல்லத்தில் காந்தி தங்கியிருந்த போது ஏழைகளின் நிலை கண்டு பாரிஸ்டர் உடையை துறந்து அரையாடை அணிந்தார். 1921ல் நடந்த இந்நிகழ்வின்

மதுரை : மகாத்மாகாந்தியடிகள் மதுரையில் வழக்கறிஞர் உடையை துறந்து அரையாடை அணிந்ததன் நுாற்றாண்டு விழா செப்., 22 காந்தி மியூசியத்தில் கொண்டாடப்படுகிறது.

மியூசிய துணைத்தலைவர் மாணிக்கம், உறுப்பினர் பாலசுந்தரம் கூறியதாவது: மேலமாசி வீதியில் உள்ள 251 ஏ இல்லத்தில் காந்தி தங்கியிருந்த போது ஏழைகளின் நிலை கண்டு பாரிஸ்டர் உடையை துறந்து அரையாடை அணிந்தார். 1921ல் நடந்த இந்நிகழ்வின் நுாறாவது ஆண்டு விழாவில் காந்தி மற்றும் ராஜாஜியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்து கொள்கிறார். மேலமாசி வீதி இல்லத்தில் கதர் பவன் செயல்பட்டாலும் காந்தி தங்கிய அறை பாதுகாக்கப்படுகிறது.

அங்கு சிறப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. இன்டாக்ட் அமைப்புடன் சேர்ந்து அரையாடை நுாற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிட உள்ளோம். 9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு 'அரையாடையில் அண்ணல்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும் மாநில அளவில் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் பரிசு வழங்கப்படும் என்றனர். மியூசிய இயக்குனர் நந்தராவ், கல்வி அலுவலர் நடராஜன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X