பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பசுமையானது

Added : செப் 05, 2021
Share
Advertisement
கடமலைக்குண்டு : சமீபத்தில் பெய்த மழையால் கடமலைக்குண்டு 'டாணா' தோட்டம் அருகே கரடு பகுதியில் பசுமை படர்ந்துள்ளது.கடமலைக்குண்டு,மயிலாடும்பாறை,வருஷநாடு, முருக்கோடை, வாலிப்பாறை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் வருஷநாடு மலைப்பகுதி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் கிடைக்கும் மழைநீர் ஒன்று சேர்ந்து வருஷநாடு வைகை ஆறாக செல்கிறது.மலைப்பகுதியில் மழை பெய்தாலும்

கடமலைக்குண்டு : சமீபத்தில் பெய்த மழையால் கடமலைக்குண்டு 'டாணா' தோட்டம் அருகே கரடு பகுதியில் பசுமை படர்ந்துள்ளது.

கடமலைக்குண்டு,மயிலாடும்பாறை,வருஷநாடு, முருக்கோடை, வாலிப்பாறை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் வருஷநாடு மலைப்பகுதி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் கிடைக்கும் மழைநீர் ஒன்று சேர்ந்து வருஷநாடு வைகை ஆறாக செல்கிறது.மலைப்பகுதியில் மழை பெய்தாலும் தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைவாகவே உள்ளது.

வெயிலால் கடந்த சில வாரத்திற்கு முன் காய்ந்திருந்த மரம், செடி கொடிகள், சமீபத்தில் பெய்த மழையால் தற்போது செழிப்புடன் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. வெளியூர்களில் இருந்து இப்பகுதிக்கு சென்று வருபவர்கள் பசுமை படர்ந்த பகுதியை ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X