சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

Added : செப் 05, 2021
Share
Advertisement
கன்னிவாடி : கரிசல்பட்டியில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட, 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.கரிசல்பட்டியைச் சேர்ந்த மரிய செபஸ்தியார் 27, கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், மன உளைச்சலுடன் புலம்பியபடி இருந்தார்.குடும்பத்தினரின் சாப்பாட்டில் விஷம்

கன்னிவாடி : கரிசல்பட்டியில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட, 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கரிசல்பட்டியைச் சேர்ந்த மரிய செபஸ்தியார் 27, கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், மன உளைச்சலுடன் புலம்பியபடி இருந்தார்.குடும்பத்தினரின் சாப்பாட்டில் விஷம் கலந்த அவர், மனைவி பிரிசில்லா லூயிஸ் 23, மகள்கள் வெர்ஜின் மேரி 2, எட்டு மாத குழந்தை கியூரா ஆகியோருடன் அந்த உணவை உண்டார். அங்கு வந்த மரியசெபஸ்தியாரின் தந்தை ஆரோக்கியம் தகவலறிந்து பதறினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் விஷம் உண்ட 4 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X