குழாய் சேதம்: வீணாகுது குடிநீர்

Added : செப் 05, 2021
Share
Advertisement
போடி : போடி அருகே சிலமலை ஊராட்சி அலுவலக பின்புறம் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சிக்கு உட்பட்டவை சூலப்புரம், கிழக்கு, மேற்கு காலனி. ஆயிரத்தி 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், சூலப்புரம் குதுவல் பகுதியிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு குடிநீர் சப்ளை

போடி : போடி அருகே சிலமலை ஊராட்சி அலுவலக பின்புறம் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது.

போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சிக்கு உட்பட்டவை சூலப்புரம், கிழக்கு, மேற்கு காலனி. ஆயிரத்தி 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், சூலப்புரம் குதுவல் பகுதியிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சிலமலை ஊராட்சி அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் கீழ் பகுதியில் குழாய் சேதமடைந்துள்ளது. அதுபல நாட்களாகியும் சீரமைக்கப்படாததால் குடிநீர் வீணாக கீழே செல்கிறது. சுற்றுப்பகுதியில் சப்ளை பாதிக்கப்படுகிறது. எனவே குடிநீர்வீணாவதை தடுத்து, தரமான குழாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X