கண்மாயில் முட்செடிகள் அகற்றப்படுமா

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்துார் கண்மாயில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நாகலாறு ஓடை நீர் ஜம்புலிப்புத்துார் கண்மாயில் தேங்கும். இதன்மூலம் ஜம்புலிப்புத்துார், எஸ்.எஸ்.புரம், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நிலத்தடிநீர் ஆதாரம் மேம்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக

ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்துார் கண்மாயில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நாகலாறு ஓடை நீர் ஜம்புலிப்புத்துார் கண்மாயில் தேங்கும். இதன்மூலம் ஜம்புலிப்புத்துார், எஸ்.எஸ்.புரம், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் நிலத்தடிநீர் ஆதாரம் மேம்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இக்கண்மாயில் போதுமான அளவு நீர் தேங்கவில்லை.

ஏற்கனவே கண்மாயின் கிழக்குப்பகுதியில் மதகு சேதம் அடைந்துள்ளது. நீர் தேங்கினாலும் மதகு வழியாக வெளியேறி வீணாகிவிடும். இந்நிலையில் தற்போது கண்மாயில் முட்செடிகள் அதிகம் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அவற்றை அகற்றி சீரமைத்து முழுமையாக தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X