கோடவுனாக மாறிய பயணிகள் நிழற்குடை

Added : செப் 05, 2021
Share
Advertisement
போடி : போடி அருகே நாகலாபுரம் -- டொம்புச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்குடை பயன்பாடின்றி பொருட்கள் வைக்கும் கோடவுனாக மாறியுள்ளது.பெருமாள்கவுண்டன்பட்டி, கரையாம்பட்டி கிராம மக்கள் தேனிக்கு செல்ல இந்த மெயின்ரோட்டிற்கு வந்து பஸ் ஏற வேண்டும். அவர்கள் மழை, வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க ரூ. பல லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை 10 ஆண்டுகளுக்கு முன் இங்கு

போடி : போடி அருகே நாகலாபுரம் -- டொம்புச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்குடை பயன்பாடின்றி பொருட்கள் வைக்கும் கோடவுனாக மாறியுள்ளது.

பெருமாள்கவுண்டன்பட்டி, கரையாம்பட்டி கிராம மக்கள் தேனிக்கு செல்ல இந்த மெயின்ரோட்டிற்கு வந்து பஸ் ஏற வேண்டும். அவர்கள் மழை, வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க ரூ. பல லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை 10 ஆண்டுகளுக்கு முன் இங்கு கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாமல் டூவீலர் ஸ்டாண்டாகவும். மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பொருள்கள் வைக்கும் கோடவுனாக தனிநபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயன்படுத்த முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் மது அருந்தப்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X