பொதுமக்களிடம் கனிவு காட்ட இணைப்பதிவாளர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களிடம் கனிவு காட்ட இணைப்பதிவாளர் அறிவுரை

Added : செப் 05, 2021
Share
திண்டுக்கல் : 'ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் எதிர்கொள்ள வேண்டும்' என, கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளர் காந்திநாதன் தெரிவித்தார்.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சார்பில் ரேஷன் கடை பணியாளருக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், சார் பதிவாளர்கள் சிவசுப்பிரமணி,

திண்டுக்கல் : 'ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் எதிர்கொள்ள வேண்டும்' என, கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளர் காந்திநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சார்பில் ரேஷன் கடை பணியாளருக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், சார் பதிவாளர்கள் சிவசுப்பிரமணி, ரத்னாதேவி, வழங்கல் அலுவலர் பழனிக்குமார் பங்கேற்றனர்.காந்திநாதன் பேசியதாவது:

ரேஷன் பணியாளர்கள் வழக்கமான பணிகளுடன், கொரோனா ஊரடங்கு காலத்தில் டோக்கன் விநியோகம், நிவாரண பொருள்கள் விநியோகத்தை சீராக வழங்குதலையும் மேற்கொண்டனர். இதில் சில குறைபாடுகள் இருந்தாலும், புகார்களை எதிர்கொண்டு பொது விநியோகத் திட்டம் நன்கு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பணியாளர்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் எதிர்கொண்டு சேவையாற்ற வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X