பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் ஆய்வில் அசத்தும் பள்ளி ஆசிரியர்

Added : செப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேனி : கூடலுாரை சேர்ந்தவர் மோகன்குமாரமங்கலம், 45. ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியரான இவர் வைகை தொல்லியல் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பை நிறுவி தமிழ்நாடு தொல்லியல், மானிடவியல், நாட்டாரியல்,தமிழ் சமூகப் பண்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார். பாவெல் பாரதி என்ற புனைப்பெயரில் நுால்கள் எழுதுகிறார்.2016ல் ஏறுதழுவுதல்,
 தொல்லியல் ஆய்வில் அசத்தும் பள்ளி ஆசிரியர்

தேனி : கூடலுாரை சேர்ந்தவர் மோகன்குமாரமங்கலம், 45. ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியரான இவர் வைகை தொல்லியல் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பை நிறுவி தமிழ்நாடு தொல்லியல், மானிடவியல், நாட்டாரியல்,தமிழ் சமூகப் பண்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார். பாவெல் பாரதி என்ற புனைப்பெயரில் நுால்கள் எழுதுகிறார்.

2016ல் ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, தொன்மை, பண்பாடு, அரசியல் குறித்த நுாலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு இருந்ததை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். இந்நுாலின்தொல்லியல் சான்றுகள் பகுதிகளை தமிழக அரசின் 9 ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம் பெற செய்துள்ளனர்.

மயிலாடும்பாறை அருகுவெளி என்ற இடத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறையில் வரையப்பட்ட ஓவியத்தில் காளை மாடு திமிழுடன் உள்ளதை கண்டுபிடித்து ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு என்பதையும், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் மனிதன் காளையுடன் இருக்கும் ஓவியத்தை கண்டறிந்து சான்றாக படைத்துள்ளார்.நகர வாழ்விற்கு சான்று2018ல் கண்ணகி கோயிலும் வைகைப் பெருவெளியும் என்ற நுாலில் மதுரையை எரித்த கண்ணகி சென்ற வழியை நாட்டார் வழிபாட்டு சான்றுகள், தொல்லியல் சான்றுகள் மூலம் அடையாளம் காணும்படி எழுதியுள்ளார்.

'வைகைவெளி தொல்லியல் கற்காலம் முதல் கட்டுமான காலம் வரை' என்ற நுாலில் 20 லட்சம் ஆண்டுக்கு முந்தைய பழங்கால சமூகம் வரலாறு வளர்ச்சியில் கீழடி காட்டு நகர வாழ்விற்கு சான்றாக விளங்குகிறது. இதில் மனிதன் பரிணாமத்தையும், குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பு, வணிகம், கட்டுமானம், எழுத்தறிவு ஆகியவற்றின் தொல்லியல் தகவல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் முக்கிய இடங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார்.வீட்டில் நுாலகம்இவரது புதிய கண்டுபிடிப்புகளாக வராக நதிக்கரையில் அரிதான குழிக்குறி கல்திட்டை, கம்பம் பள்ளத்தாக்கில் புதிய கற்கால கருவிகள், வைகை வெளியில் பெருங்கற்சின்னங்களை குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை தேனி அருங்காட்சியத்தில் இடம்பெற செய்துள்ளார். ஆய்வு கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது கீழடியில் மேலெழும் தமிழர் வரலாறு ஆகும். வீட்டில் நுாலகத்தை உருவாக்கியுள்ளார்.

ஆசிரியர் கூறுகையில், '' தினமும் வாழ்வில் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைத்து தேடிப் போகும் போது பண்பாடு, கலாசாரம், தொல்லியல் ஆய்வு பொருட்கள் கிடைத்தது. மாணவர்களுக்கு கேள்வி கேட்கும் ஆற்றலை உருவாக்கி ஆய்வு நோக்கி அழைத்து செல்ல வேண்டும் என்பதே லட்சியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X