தமிழ்நாடு

சுருளி அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவது... எப்போது?

Added : செப் 05, 2021
Share
Advertisement
கம்பம் : கொரோனா ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க எப்போது அனுமதி கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக 18 மாதங்களாக சுருளி அருவியில் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வில் கடந்த வாரம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கம்பம் : கொரோனா ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க எப்போது அனுமதி கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக 18 மாதங்களாக சுருளி அருவியில் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வில் கடந்த வாரம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சுருளி அருவிக்கு இதுவரை அனுமதிக்கவில்லை. வனத்துறையினரோ சுருளிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அருவியில் குளிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

அருவிக்கு வருவதே குளிக்கத்தானே என பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் தவிப்பில் உள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் சுருளி அருவிக்கு வருவோரை கட்டுப்படுத்த கம்பம் ஒன்றியம் சார்பில் சுருளி அருவி, கருநாக்கமுத்தன்பட்டி விலக்கு உள்ளிட்ட இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி கூறுகையில், ''சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் உத்தரவில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X