பொது செய்தி

இந்தியா

கங்கை நதி தூய்மை பணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
குர்கான் : கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் இன்று காலை டில்லியில் நடக்கிறது.நாட்டை காக்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கோபால் ஷர்மா, 79, ஹெம் லோகுமி, 70, மனோஜ் கேஷ்வர், 53, ஆகியோர் ஆறுகளை காக்க களம் இறங்கியுள்ளனர். இதற்காகவே, ஹரியானா மாநிலம் குர்கானில் 'அதுல்ய கங்கா' என்ற
Clean Ganga, Ganga River, Atulya Ganga, கங்கை நதி

குர்கான் : கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் இன்று காலை டில்லியில் நடக்கிறது.

நாட்டை காக்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கோபால் ஷர்மா, 79, ஹெம் லோகுமி, 70, மனோஜ் கேஷ்வர், 53, ஆகியோர் ஆறுகளை காக்க களம் இறங்கியுள்ளனர். இதற்காகவே, ஹரியானா மாநிலம் குர்கானில் 'அதுல்ய கங்கா' என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். இந்த அமைப்பு ஹரித்துவாரில் இருந்து கோமுகி வரை, கங்கை ஆற்றை சுத்தம் செய்யும் பணியில், 11 ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


latest tamil news



இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உட்பட ஏராளமான இளைஞர்களும் தன்னார்வல தொண்டர்களாக இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் சார்பில், 2020ம் ஆண்டு டிச., 16ல், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துவங்கிய கங்கையை துாய்மைப் படுத்தும் முகாமை, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜூன் 23ம் தேதி நிறைவடைந்த இந்த முகாமில், 190 நாட்களில் 5,530 கி.மீ., துாரத்துக்கு கங்கை ஆற்றின் கரைப் பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆறுகள் அழிந்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்பதை 'அதுல்ய கங்கா' அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த இயக்கத்தில் நாளுக்கு நாள் தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர்.

இந்த அமைப்பில் இணைய விரும்புவோர், www.atulyaganga.com என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த அமைப்பின் பணிகள் குறித்த கூட்டம், டில்லி உள்ள தான்சென் மார்க் திரிவேணி அரங்கத்தில், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்று பேசுகின்றனர். மதியம் 2:00 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
05-செப்-202122:14:30 IST Report Abuse
Suppan அஹமெடபாதில் உள்ள சாபர்மதி ஆறும் மோசமாகத்தான் இருந்தது. பல தொழிற்சாலைக் கழிவுகளும் நகர்ப்புறக் கழிவுகளும் கலந்து அருகில் செல்லமுடியாத அளவுக்கு இருந்தது. பல கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டன. இன்று அது சுற்றுலாதலமாக மாறி உள்ளது. செலவு ரூபாய் 1400 கோடி. கூவத்தில் முதலை என்று கருணா விட்ட கதை மாதிரி மோதி சொல்லவில்லை. சுத்தம் செய்து காண்பித்தார். பல ஆண்டுகளாக மாசுபடுத்தப் பட்ட கங்கையும் சுத்தமாகும் என நம்புவோம்.
Rate this:
Cancel
05-செப்-202121:27:21 IST Report Abuse
அப்புசாமி இன்னமும் பாதி எரிஞ்ச பொணத்தை கங்கைய இழுத்து உடறானுங்கோ..
Rate this:
Cancel
05-செப்-202121:23:18 IST Report Abuse
அப்புசாமி கங்கையைப் புனிதப்படுத்தி கப்பல் சேவையெல்லாம் தொடங்குனாங்களே தனபாலு... ஒண்ணுமே கண்ணுக்கு தெரியலியே தனபாலு... நீர்மூழ்கி கப்பலா இருக்குமோ தனபாலு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X