இலங்கையில் செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் பேசி, தமிழகத்தில் ரியாலிட்டி ஷோவில் தமிழ் மக்களை அழகால் கவர்ந்து, பார்ப்பவர்கள் எல்லாம் ‛லவ்லி' என சொல்லும் லாஸ்லியா மனம் திறக்கிறார்...
'பிரண்ட்ஷிப்' கேரக்டர், முதல்முறை கேமரா முன்?
ஜாலியான கல்லுாரி மாணவி கேரக்டர். பசங்க மத்தியில் ஒரு பெண்ணை சமூகம் எப்படி பார்க்கிறது என்பது கதை. முதலில் பதட்டமாக இருந்தேன். இயக்குனர்கள் ஜான், ஷாம் ஈஸியா நடிக்க வைத்தனர். கொரோனாவுக்கு பின் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாவதால் ஆர்வமாக உள்ளேன்.
காதல், வில்லன் என வழக்கமான கதைக்களம் தானா?
இல்லை, நட்புக்குள் இருக்கும் காதலை மட்டும் பேசும் படம், இந்த மாதிரி நட்பு வாழ்க்கையில் பார்த்திருக்கேன். அவங்க கடைசி வரை நட்பாக இருக்கிறார்கள். படத்துலயும் அதை தான் அழகா காட்டிருக்காங்க
லாஸ்லியாவின் நண்பர்கள் வட்டம் எப்படி இருக்கு?
இலங்கையில் வேலை பார்த்த இடத்தில் நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவர்களால் தான் இந்தியா வந்தேன். எது சரி, எது தப்பு என ஆலோசிக்க குறைந்தளவு நட்பு வட்டம் தான் எனக்கு இருக்கு.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடித்தது?
இந்த படத்தில் ஜோடி இல்லை, சதீஷ், படவா கோபி, பாலசரவணன் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும், ஹர்பஜன்சிங்குடன் நடிக்க போகிறோம் என பயந்தேன், ஆனால் எளிமையாக, ரொம்ப சாதாரணமாக பழகினார். அவருக்கு சதீஷ் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொடுத்து பேசினார்.
இலங்கையில் செய்தி வாசிப்பு, இந்தியாவில் நடிப்பு?
பெரிய விஷயம்... பல சோதனைகளுக்கு பின் இந்தியா வந்தேன். இப்ப நினைச்சுப் பார்த்தா கூட பிரமிப்பாக உள்ளது. பிக் பாஸ், சினிமா என நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு.
'பிரெண்ட்ஷிப்'ல் டான்ஸ், நடிப்பு ஈஸியா இருந்ததா?
டான்ஸ் ரொம்ப பிடிக்கும். படத்தில் 100 சதவீதம் நல்லா டான்ஸ் பண்ணியிருக்கேன். என்னால் முடிந்த அளவு சிறப்பாக நடித்துள்ளேன். ஆனால், படத்தை மக்கள் முழுமையாக பார்த்து கருத்து கூறிய பிறகு தான் என் மேல் எனக்கு நம்பிக்கை வரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE