பொது செய்தி

இந்தியா

ஏழுக்கும் மேற்பட்ட கோல்ப் போட்டிகள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
'நடப்பு ஆண்டில், தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் ஏழுக்கும் மேற்பட்ட கோல்ப் போட்டிகள் அடுத்த இரண்டு மாதங்களில் ஜம்மு, காஷ்மீரில் நடைபெறவுள்ளது என, ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா துறை அறிவித்துள்ளது. ஜம்மு, சுற்றுலா துறை தரப்பின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஷ்மீர் சுற்றுலா பதிவு மற்றும் விளம்பரம் துணை இயக்குனர் டாக்டர் அஹ்சனுல்ஹக்சிஷ்டி மற்றும் ஜம்மு சுற்றுலாத்துறை

'நடப்பு ஆண்டில், தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் ஏழுக்கும் மேற்பட்ட கோல்ப் போட்டிகள் அடுத்த இரண்டு மாதங்களில் ஜம்மு, காஷ்மீரில் நடைபெறவுள்ளது என, ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

ஜம்மு, சுற்றுலா துறை தரப்பின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் சுற்றுலா பதிவு மற்றும் விளம்பரம் துணை இயக்குனர் டாக்டர் அஹ்சனுல்ஹக்சிஷ்டி மற்றும் ஜம்மு சுற்றுலாத்துறை துணை இயக்குனர் நரேஷ்குமார் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், சுற்றுல்லா ஆபரேட்டர்கள், உள்ளூர் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது அவர்கள், 'ஜம்மு காஷ்மீ்ர் சுற்றுலா பங்குதாரர்களின் தயார் நிலை குறித்தும், கொரோனா தொற்றுக்கு பின் நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைள் குறித்தும் விளக்கினர். இதுவரை 95 சதவீதம் சுற்றுலா பங்குதாரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.குறிப்பாக, டாக்சி ஓட்டுனர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் அதில் அடங்குவர்.
ஜம்மு தாவி கோல்ப் மைதானம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் ஏழுக்கும் மேற்பட்ட கோல்ப் போட்டிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது, இதில் இந்தியா மற்றும் வௌிநாடுகளில் உள்ள 126 முன்னணி கோலப் வீர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து முக்கிய நகங்களிலும் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களுடன் நேரடி விமான சேவைகள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X