சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை அருகே பயங்கர விபத்து: 5 இளைஞர்கள் பலி

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: சென்னை அருகே, லாரி மீது சொகுசு கார் மோதியதில் 5 பொறியியல் பட்டதாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பல்கலையில், பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல் படித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜ ஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோருக்கு , நாளை(செப்.,06) சென்னையில் நேர்முக
சென்னை, கார்,லாரி, மோதல், பலி, உயிரிழப்பு

சென்னை: சென்னை அருகே, லாரி மீது சொகுசு கார் மோதியதில் 5 பொறியியல் பட்டதாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பல்கலையில், பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல் படித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜ ஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோருக்கு , நாளை(செப்.,06) சென்னையில் நேர்முக தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக, அரவிந்தை தவிர மற்ற 4 பேரும் சென்னைக்கு வந்து காரப்பாக்கத்தில் தங்கியிருந்தனர்.
இவர்கள் 5 பேரும், நேற்று இரவு ராஜ ஹாரீசுக்கு சொந்தமான சொகுசு காரில் திநகரில், பொருட்கள் வாங்கிவிட்டு வண்டலூருக்கு சென்றனர். காரை நவீன் ஓட்டியதாக தெரிகிறது.

சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த முடித்த மேட்டூர் நவீன், ராஜ ஹாரீஸ், திருச்சிஅஜய், புதுக்கோட்டை ராகுல், சென்னை அரவிந்த் சங்கர் ஆகியோருக்கு நாளை இண்டர்வியூ இருந்துள்ளது. இதற்காக அரவிந்த் தவிர மற்றவர்கள் சென்னை வந்தனர். காரப்பாக்கத்தில் தங்கியிருந்த இவர்கள் நேற்றிவு திநகர் சென்றுவிட்டு ஹாரீசுடைய சொகுசு காரில் வண்டலூர் வந்தனர். காரை நவீன் ஒட்டினார். பெருங்களத்தூர் அருகே வந்தபோது அங்கு இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.விபத்தில் 5 பேர் இறந்தனர். குரோம்பேட்டை போலிசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news
பெருங்களத்தூர் அருகே, வந்த போது நிலை தடுமாறிய கார், இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், லாரிக்கு அடியில் சிக்கி கார் நொறுங்கியதில், 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswa - chennai,இந்தியா
09-செப்-202119:28:19 IST Report Abuse
Viswa டிராபிக் போலீஸ் கண்களில் இது தெரியாமல் இருக்குமா ?? கார் என்றால் விட்டு விடுவது இவர்கள் வாடிக்கை.இவர்கள் தேவை துட்டு
Rate this:
Cancel
05-செப்-202121:57:21 IST Report Abuse
kulandai kannan In residential areas people without parking space in their houses, park their cars 24x7 on streets, posing a threat to pedestrians. Corporation should impose a monthly charge of, say Rs. 5000/- per month from them.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-செப்-202121:54:45 IST Report Abuse
D.Ambujavalli நாங்கள் சென்னை பெங்களூரு பாதகியில் செல்கிறவர்கள். ஐந்து மணிக்கு சென்னையை விட்டால் மிக ஆபத்து. பாதையை விடாது இருபுறமும் லாரிகள் நின்றபடி இருக்கும். டிரைவர்கள் ‘அந்தி - சாந்தி ‘ க்கு சென்று நின்று நிதானமாக வந்து வண்டி எடுத்தாலும், பிசாசு வேகம், ‘உள்ளே போன பிசாசின் வேகம்’ கார்கள் பாத்து, பதினைந்து வேகத்தில் கூட செல்ல முடியாது கூடுமானவரை பகல் ஒரு மணிக்குள் கிளம்பி ஏழு மணிக்குள் வந்தால் உயிர் நமக்கு சொந்தம் ஹைவேஸில் இரவு லாரிகளின் அட்டகாசம் தாங்கவே முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X