நலமுடன் உள்ளேன்: விஜயகாந்த் டுவிட்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (16)
Advertisement
சென்னை: துபாய்க்கு சிகிச்சைக்குச் சென்ற விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
விஜயகாந்த், துபாய், சிகிச்சை, நலம், டுவிட்

சென்னை: துபாய்க்கு சிகிச்சைக்குச் சென்ற விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அமெரிக்கா செல்லும் விமானத்தில் அவர் பயணிக்கவில்லை.


latest tamil news


இந்த நிலையில், விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவர், சிகிச்சைக்காக துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். தற்போது துபாயில் சிகிச்சையில் உள்ளார். அவரது மகன் சண்முக பாண்டியன் உடன் சென்றார்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா பாஸ்போர்ட் புதுப்பிக்க காலதாமதம் ஆனதால் அவர் துபாய் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் விஜயகாந்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என்று பதிவிட்டு அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இதனால், தே.மு.திக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-202122:22:45 IST Report Abuse
முருகன் இந்த கேள்வியை ஒரு அதிகாரம் மிக்க தலைவர் வெளிநாட்டு க்கு சிகிச்சை செல்லும் போது கேட்க முடியுமா ? . திரு விஜயகாந்த் குணமடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
05-செப்-202120:57:04 IST Report Abuse
tamilvanan உடல் நலம் சரியாக இருந்தால் ஏன் பரிவாரங்களுடன் துபாய் செல்ல வேண்டும்? மருத்துவ பரிசோதனை இங்கு செய்ய முடியாதா? இங்கு டாக்டர்களே இல்லையா? அல்லது நம்மூர் டாக்டர்கள் மீது நம்பிக்கை இல்லையா?
Rate this:
05-செப்-202122:50:56 IST Report Abuse
Vittal anand rao.இNகே இட ஒதுக்கீட்டு தமிழ் வழி டாக்டர்கள். சுபாளையே லண்டன் மற்றும் சிங்ஸ்புர போகிறார்....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-செப்-202120:19:14 IST Report Abuse
sankaranarayanan நீட் தேர்வு வேணடாம் = வேண்டாம் என்று கூறும் திராவிட கட்சிகளுக்கு இது ஒரு பாடம் - எச்சரிக்கை நாடு நலம் பெற வேண்டுமென்றால் நீட் அவசியம் தேவை. இதில் உங்கள் அரசியலை நுழைக்காதீர்கள். தொட்டதற்க்கெல்லாம் அயல்நாட்டிற்கு போக வேண்டிய அவசியம் அரசியல் வாதிகளால்தான் தமிழ்நாட்டிற்கு உண்டாயிற்று என்பதற்கு இதுவே ஒரு சான்று. பிரேமலதாவிற்கு கேப்டன் விஜயகாந்தின் பாஸபோர்ட்டைக்கூட புதுப்பிக்க நேர்மில்லை. ஆனால் தேர்தலில் அவரை இழுத்துவந்து பேசச்சொல்லி படாதபாடு படுத்தியது ஆணடவனுக்கே பொறுக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X